பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 அ. அ. ச. ஞானசம்பந்தன் பேசிய சமயமும் கடவுள் நம்பிக்கையும், மக்கள் அனை வரையும் இறைவனாகவே காணுகிற நிலையும் வெறும் பேச்சளவில் நில்லாமல் அவர்கள் வாழ்வுடன்,குருதியுடன் கலந்த ஒன்றாக இருந்தது. ஆனால், நம்மைப் பொறுத்த வரையில் சமயம் என்பது சமயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கருவியாக அமைந்துவிட்டது. பெரியோர் களாகிய அவர்கள் வாழ்ந்து காட்டியதை மறந்து விட்டு, அவர்கள் கூறியபடி வாழவும் மறுத்துவிட்டு, அவர்கள் பாடல்களை மட்டும் மனம் செய்து ஒப்பிப்பதால், பாரா யணம் செய்வதால் எப்பயன் விளையும்? வெறும் பாரா யணம் பயன்தருமெனில் ஒலிப்பதிவு எந்திரங்கள் அனைத் துமே பயன் பெற்று விடும்! சைவர்களாகிய நாம் நம் நெஞ்சில் கைவைத்து நம் முன்னோர்களாகிய நால்வர் சென்றவழியில் ஒரளவாவது செல்ல முற்படுகிறோம் என்று கூறமுடியுமா? அவர்கள் பாடல்களைப் படிக்கிறோம்; படிப்பிக்கிறோம்; ஆனால் உணர்கிறோமில்லை. கற்றல், கேட்டல் முதலியவற்றின் அப்பாற்பட்டுள்ள உள்ளத்து உணர்வோடு ஒன்று கிறோமா? - - திருமூலர் ஆகிய .ெ பரி யார் அகவாழ்க்கையில் எத்துணைத் துரம் முன்னேறிச் சென்றுள்ளாரோ அதே அளவுக்குப் புறவாழ்க்கையிலும் முன்னேறியுள்ளார். நரம்பு மண்டலங்களைப் பற்றி உடற்கூறு வல்லுநர்கள் இன்று எத்துணைத் தூரம் அறிந்து பேசுகிறார்களோ அத்துணைத் துரம் மூலரும் அறிந்துவைத்திருக்கிறார். எனவே அகத் துறையில் முன்னேறிவிட்ட ஒரே காரணத் திற்காகப் புறத் துறையில் முன்னேற்றம் இன்றி இருக்க, வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. இறைபணியில் எத்துணை முன்னேறிச் சென்றாலும் இப்பெருமக்கள் ஏனைய உயிர்களிடத்துக் கொண்டுள்ள அன்புக்கு எல்லையே இல்லை. இதற்கு ஒரு காரணமும்