பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 115 இயேசு பெருமான் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னரே கண்டு மனிதன் ரொட்டித் துண்டால் மட்டும் வாழ்வதில்லை' என்று கூறிப்போனார். இந்த நாட்டில் வாழ்ந்த பெரியோர்களும் அதனையே கூறினர். மனிதனு டைய அக வாழ்வு (மன வாழ்வு) செம்மைப்படாத பொழுது புற வாழ்வு (உலக வாழ்வு) எத்துணைச் சிறப் புடன் பொலிந்தாலும் பயனில்லை. இதனை நன்கு மனத்துட் கொண்டு இந்நாட்டில் வாழ்ந்த பேரருளா ளர்கள் நமக்கு வழிகாட்டிப் போயினர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு : தம் ஆன்மாவை முன்னேற்ற வேண்டிய தேவை இல்லாத இப் பெருமக்கள் இவ்வுலகிடை வந்து பிறந்து நம்முடன் பழகி நம்முடைய நன்மைக்காகவே சிலபலவற் றைக் கூறிப் போயினர். அவர்கள் தம் நிலையிலிருந்து நம்மாட்டுக் கொண்ட கருணையால் கீழிறங்கி வரு கிறார்கள் என்பதை அறிந்ததால்தான் அவர்கள் வரு கையை அவதாரம் (கீழிறங்கி வருதல்) என்றும் குறிக் கிறோம். முழுமுதற் பொருளாகிய இறைவன் மட்டும் 'செளலப்பியம் (எளிவந்த தன்மை) உடையனவல்வன். அவனருள் பெற்ற பெரியோர்களும் இவ் எளிவந்த தன்மையை நிரம்பப் பெற்றவர்கள். சீவன்முத்தராகிய திருஞானசம்பந்தர் போன்ற பெரியார்கள் திருவிழிமிழலை போன்ற பகுதிகளிற் பஞ்சம் வந்தபொழுது அவண் மடம்வைத்து அனைவருக்கும் சோறு சமைத்துப்போட்டு அவர்கள் பசிப்பிணியைப் போக்கினர் என்று வரலாறு பேசுகிறது ஆண்டவனிடம் பக்தி கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்திய அவர்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழவும் வழி கூறினர்-இதனால் அப் பெரியார்கட்குப் பொதுமக்கள் தொடர்பு நிரம்ப இருந்தமையை அறிகிறோம். அவர்கள்