பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 183 முன்னர்ச் சைவசமயமாகிய நமது சமயத்தின் தனி இயல்பு ஏதேனும் உண்டா என அறிவது நலம்பயக்கும். புத்தம், சமணம், கிறித்துவம். இஸ்லாம் போன்ற சமயங் கள் ஒவ்வொரு தனி மனிதரால் வகுக்கப் பெற்றன. தனி மனிதர் வகுத்தவை: தனி மனிதர்கள் தீர்க்கதரிசிகளேயாயினும் அவர் களால் வகுக்கப்பட்ட சமயம் பிறரைத் தம் வழிபடுத்த வேண்டும் என்று கருதும் குறிக்கோளுடையது. தீர்க்க தரிசிகளாகிய அவர்கள் கண்டு கூறிய வழியே உண்மை’ வழி என்றும் பிற வழிகள் வழிக்காட்டா என்றும் நம்பும் சமயங்கள் அவை. எனவே உய்வுபெற வேண்டுமாயின் அச்சமயங்களை நிறுவிய தீர்க்கதரிசிகள் வகுத்த வழி களைப் பின்பற்றி அவர்கள் கூறியபடியே நடந்துகொள்ள வேண்டும் என்றும் இன்றேல் நரகமே கிடைக்கும் என்றும் கூறுபவை அப்பிற சமங்கள். சைவத்தை ஆக்கியவர் யார்? இதன் எதிராக இச்சைவ சமயத்தைத் தோற்று' வித்தவர் யார் என்றால் ஒருவரும் இல்லை என்றுதான் விடை கூற நேரிடும். நால்வர் முதலியோர் தோத்திரப் பாடல்கள் பாடித் தம் இறை அன்பை வெளியிடுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே சைவம் இருந்து வந்தது. இவர்கள் தம் இறை அன்பை அறிவிப்பதன் மூலம் பிறருக்கு அன்பு வழியை அறிவுறுத்தினார்களே தவிர யாரையும் சைவராக மாற்ற முயலவில்லை. பிற சமயிகள் போற்றி ஏற்றுக்கொள்ளும் சமயமாற்றம் (Convertion) இவர்கள் விரும்பாத ஒன்று. காரணம் அவர்கள் மனநிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் சைவராசு வாழமுடியும்.