பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இ. அ. ச. ஞானசம்பந்தன் சைவன் ஆதல் எவ்வாறு: பிறப்பால் சைவர் என்று யாரும் இலர். சைவம் என்பது ஒரு குறிக்கோளும் மன நிலையுமே தவிரச் சில சடங்குகள் அன்று. சிவனின் இயல்பையும் ஒருவாறு அறிந்துகொண்ட பிறகு இச்சீவனுக்கு சிவனை அடைவது தவிர வேறு கதி இல்லை என்பதையும் அறியும் பொழுது ஒருவன் சைவனாக ஆகிறான். இறைவனின் பெருமையும் உயிர்களின் சிறுமையும் அறிவதற்குமட்டும் சீவனின் சிற்றறிவு பயன்படுகிறது. எத்தனை பிறவிகளில் அவன் பெருமையை நினைத்துக்கூற முயன்றாலும் அது அளவில் அடங்காது என்பதைச் சீவன் உணர ஆரம்பிக்கிறது. 'நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய்!” -முருகு 279 81 என்ற உணர்வு வரும்பொழுதுதான் ஒருவன் சைவனாக மாறுகிறான். எந்தக்குயில் பிறந்தாலும் இந்த உணர்வு வருகின்றவரை அவனைச் சைவன் என்று கூறல் முடியாது இரண்டாவது நிலை: இத்தகைய உணர்வு வந்தவுடன் அவன் அருள் கிடைத்தாலொழியத் தனக்கு உய்கதி இல்லை என்ற உணர்வு தோன்றுகிறது. 'என்னை அப்பா! அஞ்சல் என்பவர் இன்றி எய்த்து அலைந்தேன்' - திருவா. 120 'மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை.என் வாழ்முதலே' - திருவா. 128 என்று வருந்தும் பொழுது “கனவேயும் தேவர்கள் காண பரிய கனைகழலோனாகிய அவன் தனது பரம கருணை யின் காரணமாக வான்இழிந்து இம் மனபுகுந்து