பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் © 135 மனிதரை ஆட்கொள்ள (திருவா-349) வருகிறான் என்ற உணர்வு பிறக்கிறது. உடனடியாகத் தான் செய்யும் பிழைகளை நினைத்து வருந்தும் உணர்வு பிறக்கிறது. "என் பிழைக்கே குழைந்து, வேசறுவேனை விடுதி கண் டாய் (திருவா. 154) என அழுதும் குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால் என்தான் கெட்டது இரங்கிடாய்!” (திருவா496) என அவன் பால் முறையிடவும் தோன்றுகிறது. இவ்வாறு ஒருவன் ஆகும் பொழுதுதான் அவன் சைவன் ஆகிறான். உயிர்கள் செய்ய வேண்டியது யாது? சைவர்களைப் பொறுத்தமட்டில் கி ரி யை க ளி ல் அதிகம் நம்பிக்கை வைக்கப் பெற்றதாகத் தெரியவில்லை. சங்க காலத்திற்கூட இதுபற்றிப் பேசப்படுகிறது. இறப்ப உயர்ந்தவனாகிய இறைவனிடம் செல்லவேண்டும் என்று உறுதி கொண்டவன் செய்யவேண்டியவை யாவை என்ற வினாவை எழுப்பிக்கொண்டு திருமுருகாற்றுப்படை விடை கூறுகிறது. திருவடிநோக்கிச் செல்ல வேண்டும் என்ற உறுதியும் அந்த உறுதியின் அடிப்படையாகப் பிறக்கும் புறப் பாடுமே தேவையாம். புறப்பட்டுவிட்டால் அவன் நினைத்தது உடனே கைகூடும் என்று பேசப்படுகிறது. சேவடி படரும் செம்மல் உள்ளமொடு, நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும், செலவு நீ நயந்தனை ஆயின், பலவுடன், நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே’ -முருகு 62 - 66 இத்துணைத் துணிவும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் மனநிலை பெறுபவனே சைவன் ஆகிறான். சைவ சமயத்