பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 0 அ. ச. ஞானசம்பந்தன் திற்கும் ஏனைய சமயங்கட கும் உள்ள வேறுபாடு இதுவே: யாகும். சைவனின் தனி நிலை : இயேசுவை ஏற்றுக்கொண்டாலொழிய கிறித்துவ னாகவும், நபிகளை ஏற்றுக்கொண்டாலொழிய இஸ் லாமியனாகவும், புத்தனை ஏற்றுக்கொண்டாலொழிய பெளத்தனாகவும் ஒருவன் மாறமுடியாது. ஆனால் நால் வரையோ சிவஞானபோதத்தையோ ஏற்காமல் ஒரு பரம் பொருளினிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தே ஒருவன் சைவனாக இருத்தல் கூடும். இது இவ்வாறு இல்லை எனில் சாக்கிய நாயனார் வரலாற்றுக்குப் பெரியபுராணத் தில் இடம் ஏது? நால்வரும் மெய்கண்டாரும் தோன்று. முன்னர்ச் சைவமும் சைவரும் இல்லையா? வேதம் இன்றியும் சைவம்: வேதத்தை நம்பாதவர் சாக்கியர்கள். எனவே அதிற். கூறப்பட்ட ஞானபாதம் கிரியாபாதம் என்பவற்றை ஏற்காமலும் சாக்கிய நாயனார் போன்ற ஒருவர் சைவ ராக வாழமுடியும். வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் சைவராக வாழ்ந்ததும் இல்லையே! தாருக வனத்து முனிவர்கள் அனைவரும் வேதத்தில் கிரியா பாதத்தை (கர்ம காண்டம்) ஏற்றுக்கொண்டவர்கள் தாமே! அவர்கள் சைவர்களா? எனவே சைவத்தின் தனிச் சிறப்பு யாதெனில் வேதத்தை ஏற்காத சாக்கியர் சைவராகிறார்; அதனை ஏற்கும் தாருகவனத்து முனிவர்கள் சைவராக இல்லை. இன்னும் ஒருபடி சென்று இந்த நுணுக்கத்தைக் காணல் வேண்டும். சைவத்தின் புதுமை : திருநாவுக்கரசுப் பெருமான் கொல்லாமை மறைந்: துறையும் அமண்சமயம் குறுகி (திருநாவு. 37) அங்கு