பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 137. உண்மை காணப்படாமல் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தாரே! அப்பொழுது யாது நிகழ்ந்தது? ஞானஸ்நா னமோ, பிராயச்சித்தமோ நடைபெறவில்லையே! சைவ சமயத்தில் ஊறித் திளைத்திருந்த அவருடைய தமக்கை யார் திலகவதியார் யாது செய்தார்? திருநீற்றை அளித்துத் தம்பியைப் பூசிக் கொள்ளச் செய்து திருக் கோயிலுக்குச் செல்லுமாறு பணித்தார். திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்ததென' (திருநாவு 67) பூசிக்கொண்டு நாவசரர் திருக்கோயிலுக்குச் சென்று விட்டார். சைவத்தின் தனித்துவம் : குறிப்பிட்ட ஒழுங்குமுறைகள் நடைமுறைகள் என்பவற்றிற்கு முக்கியத்துவம் தரும் சமயத்தில் இது இயலாத காரியம். ஆனாலும் யாராலும் தோற்றுவிக்கப் படாமல் மனிதனுடைய வளர்ச்சிக்கேற்ப வளர்ந்துள்ள சைவ சமயத்தில் மட்டுமே இது ஏற்கப்படுவதாகும். பிற சமயத்தார்களும் அன்பின் சிறப்பைக் கூறிய துண்டு. அன்பு செய்தால் கடவுளை அடையலாம் என்று கூறும் சமயங்கள் உண்டு. ஆனால் அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின், அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே (திருமந்திரம். 270) என்று கூறும் சமயம் சைவம் ஒன்று மட்டுமேயாம். இதே கருத்தைப் பரிபாடலும் பேசுகிறது. “............ யாஅம் இரப்பவை பொருளும், பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும் அன்பும், அறனும் மூன்றும் . உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே’ -பரி-6 (78-81)