பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 0 அ. ச. ஞானசம்பந்தன் தாங்கும் தூண்களில் அபாயம் என்ற அறிவிப்பு மட்டுமே இருக்கும். அதனிடம் செல்பவர்கட்கு அச்சத்தை உண்டாக்கவே இச்சொல் பயன்படுத்தப் பெற்றுள்ளது. சில காலத்திற்கு முன்பு இங்கிலாந்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. கடல்மேல் செல்லும் மாலுமிகள் வெள்ளிக்கிழமை என்றால் மிகவும் அஞ்சுவார்களாம். காரணமற்ற அச்சம் இது என நினைத்த அரசின் கடற் படைத் துறையினர் ஒரு புதிய கப்பலைக் கட்ட வெள்ளிக் கிழமையன்று முடிவு செய்து, அதற்குக் கால்கோல் விழா முதல் அனைத்தையும் வெள்ளிக் கிழமைகளிலேயே முடித்தனர். ஒரு வெள்ளியன்று நிறைந்த பயணிகளுடன் கப்பலும் வெள்ளோட்டம் புறப்பட்டது. முட்டாள்தன மான நம்பிக்கை தகர்ந்தது என்று அனைவரும் பேசிக் கொண்டனராம். புறப்பட்ட கப்பலைப் பார்த்தவர்கள், அதன் பின்னர் அது என்ன ஆயிற்று என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதபடி அக்கப்பல் போன இடம் தெரியாமல், பொய்யாய்க் கனவாய்ப் பழங் கதை யாய்ப் போய்விட்டது. இது கருதியே போலும் நம் முன்னோர் 'அஞ்சுவதை அஞ்சாமை பேதமை' |குறள் 428) என்று கூறிப் போயினர். - * அறிவும் உணர்வும் : அச்சத்தைத் தோற்றுவிப்பது மனிதனிடம் என்றுமே உள்ள உணர்வின் வேலையாகும். இதன் எதிராக அச்சத்தின் காரணத்தை ஆயத் தொடங்கி சில அச்சங்கள் அறியாமையால் விளைவன என்றும் அவை தவிர்க்கப்பட வேண்டியன என்றும் கூறுவது அறிவின் வேலையாகும். அறிவு, உணர்வு என்ற இரண்டும் மனிதனிடம் என்றுமே உள்ளன. வாழ்க்கையில் ஒவ்வொரு சமயம், ஒரே மனிதனுக்குக்கூட, அறிவு மேம்பட்டு உணர்வு குன்றி யிருத்தலையும், இதன் மறுதலையாக இருத்தலையும் காண்கிறோம். அறிவு தொழிற்படும்போது மனத்தில் அமைதி தோன்றும் என்று கூறுவதற்கில்லை. காரணம்