பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 ச் அறிவு பகுத்துக் கொண்டே செல்லும் இயல்புடையது! எதனை எடுத்துக் கொண்டாலும் அதன் தோற்றம், வளர்ச்சி என்றும் இயல்பு என்றும் அதனைப் பகுத்துக் காண்பது அறிவின் பணியாகும். இதன் எதிராக,விரிந்தும் பரந்தும் இருக்கின்றவற்றையெல்லாம் தாண்டி அவற்றின் இடையே ஒர் ஒருமைப்பாட்டைக் காணும் இயல்புடைய தாகும் உணர்வு. அறிவைப் பிளந்து கானும் இயல்பு டையது என்றும் (analytic)உணர்வை ஒருமைப்பாட்டைக் காணும் இயல்புடையது (synthetic) என்றும் கூறலாம். வாழ்க்கையின் புதிர்களில் ஒன்று என்னையெனின் பல சமயங்களில், இந்த அறிவு, உணர்விடம் சென்று அடங்கி விடுகிறது. எத்துணைத் துரம் அறிவு சிறப்புடை யதாயிருப்பினும் அது இறுதியில் உணர்வுடன் ஒன்றினா லொழிய நன்கு பயன்படுவதில்லை. உதாரணம் தேடி அதிக தூரம் செல்லத் தேவையில்லை. அறிவுக் கடலை நீந்திக் கரை கண்டவர் விவேகானந்தர்.ஏக சந்தக்கிராகி' என்று கூறப்பெறுபவர். அவர் கல்லாத கலையும், வேதக் கடலுமே இல்லை என்னும் காட்சி அவர் சொல்லாலே தோன்றிற்று' என்று கூறத் தக்க பெருமையுடையவர் அத்தகைய அறிவுக் கடலாகிய அவர் எங்கே சென்று சங்கமமாயினார்? அவரை ஒத்த பேரறிவாளர் ஒருவரிடம் அடைக்கலமாயிருந்தால் அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் கல்வி வாசனை என்பதே ஒரு சிறிதும் இல்லாத இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அல்லவா சரணமடைந் தார்! நரேந்திரன் என்ற பிள்ளைத் திருநாமம் உடைய விவேகானந்தரை நண்பர்கள் அனைவரும் எள்ளி நகை யாடுகின்றனர். ஏன்? கல்வி வாசனையற்ற ஒருவரிடம் அவர் ஈடுபாடு கொண்டதற்காகவேயாகும். - 'கல்வி யென்னும் பல்கடற் பிழைத்த நரேந்திரன் தெய்வமென்பதோர் சித்த முண்டாகி முனிவிலாததோர் பொருளை"க் கருத முடிந்தது இராமகிருஷ்ணரிடம் சரணம் புகுந்த பிறகேயாம். எனவே மனிதனிடம் இயல்