பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 139 சைவத்தின் நுண்மை : செய்கின்ற செயலுக்கு முக்கியத்துவம் தாராமல் செயலின் பின்னேயுள்ள மனநிலைக்கு மட்டுமே முக்கியத் துவம் தருவது சைவம். இதன் பயனாகக் கரும்பை எடுத்து வளைத்து மலர்களை அம்புபோலப் போட்டவன் (மன்மதன்) எரிக்கப்படவும், கோடரியை எடுத்துத் தந்தை யின் காலைச் சேதித்தவன் (சண்டேசர்) வீடு பேற்றைப் பெறவும் முடியும் என்பதை நிரூபித்தது சைவம். ' கரும்பு பிடித்தவர்க் காயப்பட்டார் அங்கோர் கோடரியால் இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார்...' 2-5 10 - 4 س-- என்பது நாவரசர் வாக்கு, எத்துணைச் சிறந்த செயலைச் செய்தாலும் அச்செயலின் பின்னேயுள்ள மனம் தூய்மை யாக இல்லையெனில் நேர்மாறான பயனையே தரும் என்ற உலகங் கண்டு வியக்கும் கொள்கை உடையது சைவம். - பூசலார் வரலாறு : மனத்துய்மையோடு திருக்கோயில் கட்ட முயன்று அது இயலாமற்போகவே மனத்தில் தோன்றும் நினைவு ஒன்றையே துணையாகக் கொண்டு இறைவனுக்குக் கோயில் கட்டிய பெருமை உடைய பூசலன்பரைப் பெற்றிருப்பது சைவம். இத்தகைய வரலாற்றை உலக இலக்கியம் முழுவதும் தேடினாலும், கிடைப்பது அரிது. எது சைவம்? - இதன் எதிராக இமயத்தில் கைலாயத்தில் உறையும் இறைவன் வந்து விரும்பி உறையத் தகுந்த கோயிலைக் கட்டிவிட்டதாக நினைத்து இறுமாந்திருந்த பல்லவனின்