பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 .ே அ. ச. ஞானசம்பந்தன் கைலாயநாதர் கோயிலில் அவன் குறிப்பிட்ட நாளன்று நுழையவும் முடியாது என்று கூறிவிட்ட இறைவனைத் தலைவனாக உடையது சைவம். இறைவனே விரும்பி உறையத் தகுந்த இடத்தைத் தான் கட் டிவிட்டதாக நினைந்த ஒரே காரணத்திற்காக இறைவன் அக்கோயிலில் நுழைய மறுத்த வரலாறு எங்கே? இறைவனுக்கும் அத் திருக்கோயிலுக்கும் பெரும் பொருளைச் செலவழித்து விட்டதாகக் கருதிக் கொண்டு பக்தர் பட்டம் பெறும் இற்றைநாட் சைவர் எங்கே? - தொட்டதற்கெல்லாம் அஞ்சி அஞ்சிச் சாகின்ற இற்றை நாட் சமுதாயத்திற்குத் தைரியம் ஊட்டி வாழ வைக்க முனைவதுபோல அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை' (4-2-1) என்றும்’ ‘மலையே வந்து வீழினும் மனிதர்கள், நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்' (5-91-5) என்றும் நாவரசர் பாடியது சைவம். யாரைக்கண்டும் சைவன் அஞ்சத் தேவை இல்லை என்று கூறுவார் போன்று சிறிய பெருந்: தகையாராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் 'ஈனர் கட்கு எளியேன் அலேன் திரு ஆலாய் அரன் நிற்கவே' {3-39-1) என்று பாடியது சைவம். உடலுக்குத் துயர் வந்தாற்கூட அதனைப் போக்க முனையாமல் விதி என்று கூறும் பைத்தியக்காரர்களைப் பார்த்து இவ்வாறு நீங்கள் கூறிக் கொண்டிருந்தால் இறைவன் ஏன் இருக்கிறான்; அவன் அருளை நாடி நம் குறையை முடித்துக் கொள்வதே நாம் செய்யவேண்டிய கடமை என்ற கருத்தில் அவ் வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர் உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே?...... - - செய்வினை வந்து எம்மைத் தீண்டப் பெறா! திருநீல கண்டம்! (1-166-1) என்று பிள்ளையார் பாடியது சைவம். . . . . . -