பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 0 அ. ச. ஞானசம்பந்தன் மட்டுமல்லாமல் போலிச் சமயம், போலிக் கொள்கை, போலி கிரியைகள், போலி நம்பிக்கைகள் என்ற நூற்றுக் கணக்கான வேடரின் அயர்ந்து மயங்கி நிற்கின்றனர். இந்த இருபதாம் நூற்றாண்டில் இறுதியில் மனிதன் சந்திர மண்டலத்திற்கும் பலமுறை சென்று வந்துவிட்ட நிலைமையில்,சமயம் என்ற ஒன்று தேவையா என்றுபலரும் கேட்கின்ற இந்த நேரத்தில், உண்மைச் சமய தத்துவங் களை அறிந்துகொண்டு போலி வேடங்களை ஒதுக்கி எறிய முன் வந்தால் ஒழியச் சமயம் நிற்க வழி இல்லை. செத்து மடிந்து வெறும் சடங்குகளால் நிறைந்துள்ள பல சமயங்களைப் போன்றதன்று சைவம், அது உயிருடன் ஊட்டம் பெற்று வளர்ந்து வருகின்ற ஒன்றாகும். (It is a dynamic living religion and not a fassilized religion) முப்பதாம் நூற்றாண்டிற் கூட அதன் தேவை இருந்தே தீரும் அது எத்துணை முற்போக்கான கருத்துகளைக் கொண்டது என்பதைத்தான் முதலிற் குறிப்பிட்டேன். இந்த முற்போக்குக் கருத்து அதனிடை இருந்தமையால் தான் சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம் முதலிய பல காற்றுகள் அடித்தும் அது இன்னும் வாழ்கிறது. காலந்தோறும் ஏற்பட்ட மாறுதல்களை ஆராய்ந்து அவற்றில் சிறந்தவற்றைச் சைவம் விரும்பி ஏற்றுக் கொண்டு,அம்மாறுதல்களைச் சீரணம் செய்து தனதாக்கிக் கொண்டமையின் புதிய ஊட்டம் பெற்று வளர்ந்தது. ஒரே ஒர் உதாரணத்தின் மூலம் இதனை விளக்கிக் கொள்ளலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தப் பெருமான் அளவு மீறிய அறிவு வாதத்தால் இறைவனை அறிந்து கொள்ள முடியாது. எனவே அளவு மீறிச் சோதிக்க வேண்டா என்ற கருத்தில்,