பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 145 'ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்கவேண்டா சுடர்விட்டு நின்றுளன் எங்கள் சோதி' — 3-54-5. என்று கூறிப்போனார். ஏழாம் நூற்றாண்டுச் சைவம் இக் கூற்றையும் பொன்னேபோல் போற்றி ஏற்றுக் கொண்டது. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் இதற்கு நேர் மாறாக அறிவு வாதத்தால் பதியுண்மையை நிலைநாட்ட முயன்றனர். எந்த ஏதுக்களும், எடுத்த மொழியும் (பிரமாணங்கள்) பிள்ளையாரால் ஒதுக்கப் பெற்றனவோ அவற்றையே அடிப்படையாகக் கொண்டு சிவஞான போதம் பதியுண்மையை நிலைநாட்ட முயன்றது. கால மாற்றமும் அதற்கு ஏற்ப மாறுதலும் : ஆனால் பதின்மூன்றாம் நூற்றாண்டுச் சைவம் இம் மாற்றத்தை அன்புடன் எடுத்துக் கொண்டதே தவிர இது திருஞானசம்பந்தர் கூற்றுக்கு விரோதம் என யாரும் அதனை எதிர்க்கவில்லை. இதுவே வளர்கின்ற சமயம், உயிருள்ள சமயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகும். காலம் மாறும்போது ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக் கொள்ளாத எதுவும் காலாந்தரத்தில் வீழ்ந்து படுதல் இயல்பேயாகும். இன்றேல் உயிரற்ற சடங்காக அது நிற்றல் கூடும். ஒரே இயேசுவும், முகம்மதுவும், புத்தனும் தத்தம் மதங்களை நிறுவி இருந்தும் அவை ஒவ்வொன்றின் இடையே பற்பல கிளைச் சமயங்கள் தோன்றியமை ஏன்? காலாந்தர வளர்ச்சியை அப்பழைய சமயங்களில் ஏற்றி அதுவரை அதிற்படிந்திருந்த சடங்குக் குப்பைகளை அகற்றிப் புது ஊட்டம் தந்தமையாலே அக்கிளைச் சமயங்கள் இன்று வளர்ந்து உள்ளன. சைவத்திலும் பாஷாண்ட சைவம், சுத்தாத்துவித சைவம் போன்ற பல கிளைகள் தோன்றினாலும் அவை த.ப.-10