பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இ. அ. ச. ஞானசம்பந்தன் நின்று நிலவவில்லை. சித்தாந்த சைவம் இன்றும் நின்று நிலவுகிறதெனில் அதன் மாட்டு இயல்பாய் அமைந்துள்ள ஆக்க சக்திதான் காரணமே தவிரச் சைவர்கள் என்றுகூறிக் கொள்ளும் நம்மால் அது நிலைபெறவில்லை. உண்மை யைக் கூறவேண்டுமாயின் நம்மையும் மீறித்தான் சைவம் வாழ்கிறது. அதன் மாட்டு உள்ள உயிர்ச்சக்தியின் காரணமாகவும் அவ்வப்போது தோன்றும் பெரியோர்கள் தம் வாழ்வில் அதற்குத்தரும் ஊட்டத்தாலும் அது வாழ். கிறதே தவிர நம்மாலன்று. உலகில் பல சமயங்கள் மக்கள் தொகையால் மிகுதி யாக இருக்கலாம் ஆனால் அது தலைக்கணக்கே (Stastics) தவிர அதனால் எவ்விதப் பயனும் இல்லை. இனிச் செய்ய வேண்டுவன : அவ்வாறனால் இன்று உண்மையான சைவர்களாக வேண்டுமென்று நினைப்பவர்கள் செய்யவேண்டியன யாவை? முதலாவது தேவார திருவாசகம் போன்ற, திருமுறைகளைக் குருட்டுப் பாடம் செய்யாமல் பொரு ள றிந்து ஒதிப் பழகவேண்டும். சொல்விய பாட்டின் பொருள் உணர்ந்துசொல்பவர்கள் மட்டுமே சிவபுரத்தில் செல்லக்கூடும்" (திருவா. 1) என்பது நம் பெரியோர் கண்ட அனுபவ உண்மை. தினம் இத்தனைப் பாடல்கள் பாரா யணம் பண்ண வேண்டுப் என்ற முடிவில் உறுதி பூண்டு, இவ்வாறு ஒப்பிப்பதில் இன்பங் காணாமல் ஒரு நிமிட மாவது தம்மை மறந்து இவற்றைப் படிக்கப் பழக வேண்டும். காதலாகி கசிந்து, கண்ணிர் மல்கி ஒதிப் பழக, வேண்டும். திருவாசகத்தை நான் கலந்து பாடிப் பழக. வேண்டும். இம்முறையில் திருமுறைகளை ஒதிப் பழ காமல் சும்மா அவற்றைப் படிப்பதும் குழந்தைகள் வாய்ப் பாடு படிப்பதும் ஒன்றுதான். - -