பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 147 மலங்கெடுத்து மனங்கரைத்து நம்மை உய்தி பெறுமாறு செய்வன திருமுறைகள். அவை அவ்வாறு செய்ய வேண்டுமானால் ஒரு வினாடியாவது ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லை ஆறி (1-50-1)த் திருமுறைகளில் ஈடுபடல் வேண்டும். இரண்டாவதாக இந்த விஞ்ஞான யுகத்தில் சாதி சமயப் பூசல்கள் அர்த்தமற்றவையாகி விட்டன. நம் சமய குரவர்களும் பிறரும் ஏறெடுத்துக் காணாத இந்த சாதிப் பூசல் நம் காலத்தில் இன்னும் இருந்து கொண்டு உயிரை வாங்குவது விந்தையே! உண்மைச் சைவன் பிறன் ஒருவனை எத்தகையவனாயினும் இறை உறையும்கோயில் என்றே கருத வேண்டும். மூன்றாவதாக வெறும் சடங்குகட்கும் கிரியைகட்கும முக்கியத்துவம் தருதல் கூடாது. திருநீற்றையும் திருமுறை களையும் போல அகத்தையும்புறத்தையும தூய்மை செய்ய வல்லது வேறு எதுவும் இல்லை என்பதை உணரின் சடங்குகட்கு இடம் எங்கே? 'சாத்திரம் பலபேசும் சழக்கர் காள்! கோத் திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?" (5-60-3) என்றும், கங்கையாடில் என்? காவிரி ஆடில் என்? ஒங்குமா கடல் ஒதநீர் ஆடின் என்! எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே? (5-99-2) வேதம் ஒதில் என்?வேள்விகள் செய்யில் என்? நீதிநூல் பலநித்தம் பயிற்றில் ன் (5-99-4) பிற உயிர்மா ட்டுக் கருணை காட்டாமல், இறைவனை வழிபடுவதாகக் கூறிக்கொண்டால் இறைவனே நம்மைக் கண்டு நகைப்பான் என்றும் நம் பெரி யார்கள் கூறிச் சென்றனர். - - - நான்காவதாக அன்பே சிவம்’ என்பதை உண்மை யாக உணர்ந்து பிற உயிர்கள் மாட்டு அதிலும் சிறப்