பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 டு அ. ச. ஞானசம்பந்தன் பாகத் துன்புறுகின்ற பிற சோதரர் மாட்டும், உயிர்கள் மாட்டும் அன்பு செய்யப் பழக வேண்டும். அந்த அன்பு வெறும் வாய்ப்பேச்சாக இல்லாமல் தொண்டாக மாற வேண்டும். எத்தனை சைவர்கள் நோயுற்றவர்கட் குத் தொண்டு செய்யும் பணியை இதுவரைமேற்கொண்டனர்? தெருக்கூட்டுதல் கூட சமூகத் தொண்டுதான். பழுத்த பழமாகிய நாவரசரே உழவாரத் தொண்டு செய்தார் என்றால் அத்தகைய உடல் தொண்டு செய்யாத நாம் சைவர்களா? ஐந்தாவதாக வீணான அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். நாளும் கோளும் இறைவனை நம்புபவர் களை ஒன்றுஞ் செய்யா? என்ற பின்ளையாரின் வாக்கை உண்மையில் நம்பினால் அச்சம் ஏன்? சிறு தெய்வ வழி பாடும், சனீஸ்வரன் கோயில் சுற்றுதலும் பிராயச் சித்தங் களும் ஏன்? அச்சத்திற்கும் சைவத்திற்கும் உறவே கிடையாது. மனத்துணிவோடு இவற்றைக் கடைபிடித்து வாழத் தொடங்கினால் நாமும் உண்மைச் சைவர்களாக வாழ்வ துடன் சைவசமயம் உயிர் பெற்று ஊக்கத்துடன் நின்று நிலவ வழி செய்தவர்களாவோம். அன்புடைப் பெரியோர்களே! இத்துணை ஆண்டுக |ளாக சைவ சித்தாந்த மகாசமாசத்தில் நிகழ்த்தப்பட்ட தலைமை உரைகட்கும் இப்பேச்சுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு என்பதை நீங்களும் அறிவீர்கள்; யானும் அறிவேன். அப்படியானால் மரபு பிறழ்ந்து ஏன் இத் தனைக் கடுமையாகப் பேச வேண்டும் என்று பலரும் நினைதல் கூடும். ஒருசிலர் என் போன்றவர்களை இவ் விடத்தில் விட்டதே தவறு என்று கூட நினைத்தல் கூடும். தயார் மனத்தையும் வருத்த வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் என்பால் இல்லை.