பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 149 ஆனால் இன்று உலகம் சென்று கொண்டிருக்கிற நிலையில் நாம் பழமை என்ற பெயரில் சைவத்தின் உண்மையான சிறப்பை அறியக்கூட முற்படாமல் பழைய மரபுபற்றிப் பேசிக் கொண்டே இருந்தால் இன் னுஞ் சிறிது காலத்தில் நம் சைவம் பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்விடும் பிற நாடுகளைப் பொறுத்தமட் டில் ஆண்டுதோறும் கூடித் தம் சமயக் கொள்கைகளை ஆராய்ந்து அவற்றில் இக் காலத்திற்கு ஏலாதனவற்றை மாற்றி அமைக்கவும், அவற். றிற்குப் புதிய பொருள் காணவும் முயன்று வருகிறார்கள். ஆனால் நல்ல காலத்தின் அடையாளமாக சைவத் தைப் பொறுத்தமட்டில் இப்புதிய கால மாறுதலை ஏற்க முடியாத பகுதி ஒன்றும் அதில் இல்லை. எனவே நாம் எதையும் மாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இல்லை. இதுவரை யான் கூறியவை அனைத்தும் நம் பழைய சமயக் கொள்கைகளும் திருமுறைகளுமே யாகும். புதிதாக என்னுடைய கருத்து என்று ஒரு சொல் கூட நான் கூறவில்லை. அப்படி இருக்க இதில் மன மாறு பாடு ஏன் தோன்ற வேண்டும் என்ற வினா நியாயமானதே. உண்மை என்னவென்றால் திருமுறைகளில் இருக்கும் இந்த உயிர்நாடியான கருத்துகளை, கொள்கைகளை எடுத்துக் கூறாமல் சமய தீட்சை, விசேட தீட்சை என்று கூறிக் கொண்டு, திருமுறைகளைப் படிக்க அதிகாரிகள் யார் என்ற குருட்டு ஆராய்ச்சியில் சென்று கொண் டிருந்தோம். இத்தகைய தகுதிபடைத்த இன்ன அதிகாரி கட்குத்தான் திருமுறைகளும், இறைவனும் உரியவன் என்று நம் முன்னோர் மறந்துகூடச் சொல்லவில்லை. யாவர்க்கும் பொது : தகுதியும் அதிகாரமும் பெற்றவர் பொருட்டாகவா நாயன்மார்கள் இவ்வுலகிடை வந்து திருமுறைகளைப் பாடினார்? இதன் கட்டுப்பாட்டை நீ மேற்கொண்டால்