பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கு அ. ச. ஞானசம்பந்தன் தான் திருக்கோயிலுக்குச் செல்லலாம் என்று விதி வகுத் தால் பிற சமயங்களைப் போலத்தானே சைவமும் ஆகி விடும். இதனைத் தானே நம் டெரியோர்கள் மறுத்துக் கூறினர். 'இருள்தரு துன்பப் படலம் மறைப்ப மெய்ஞ்ஞான மென்றும் பொருள்தரு கண் இழந்து உள்பொருள் நாடிப் புகழ் இழந்த குருடரும் தம்மைப் பரவக் கொடுநரகக் குழிநின்று அருள்தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித் தலமே' "துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர் தம்மை இன்பக் கரைமுகந்து ஏற்றும் திறத்தன......... } 磐 - -4-92-4, 5 இறைவனைப் பற்றி நாவரசர் இவ்வாறு கூறுவன திருமுறைகட்கும் ஒக்குமன்றே? உற்றார் இல்லாதார்க்கு உறுதுணைஆவன போற்றி என்பார் புலம்பும்பொழுதும் புணர் துணையாவன’துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு ஆதரம் ஆவன சுழலார் துயர் வெயில் சுட்டிடும்போது அடித் தொண்டர் துன்னும் நிழலாவன (4.92.12,13,15, 19) என்று அல்லவா திருமுறைகள் ஒலம் இடுகின்றன. இவ்வாறு உண்மையில் துன்புற்று, வருந்தி அங்கும் இங்கும் ஒடித் தம் துயர் துடைக்கமாட்டாமல் அதற்கு வழியும் அறியாமல் அலைந்து இறுதியில் இங்காவது வழி பிறக்குமா என்று வருகின்றவர்களை வாரியணைத்து வருக என்று கூவுகின்றன. திருமுறைகள். துயர் வெயில் சுடும்போது அடித்தொண்டர் இறைவன் திருவடியை நாடி ஒடுகின்றனர் என்கிறார் வாக்கின் வேந்தர். அத்தகைய எளிமையும் சிறப்பும் வாய்ந்த திருமுறைகளை ஒதுவதற்கு அதிகாரம் முன்னேற்பாடு, கட்டுப்பாடு