பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் )ே 151 என்றெல்லாம் சொல்வி வைத்தோம். அத்தகையவர்களே இவற்றை ஓத அதிகாரிகள் என்றோம். நாமா சைவத்தைக் காத்தோம்? இவ்வாறு அதிகாரிகள் யார் என்று வகுத்த அவர் கட்கு மட்டுமே சைவம் என்று கூறுகிறவர்களிடம் சைவ மும் திருமுறைகளும் விடைபெற்றுக் கொள்ளவல்லவோ செய்யும் சைவம் என்ற பெயரில் நடைபெற்ற இக்கொடு மைகளை எல்லாம் கண்டவன் நான். மனம் நொந்து இருந்த நிலையில் விஞ்ஞான யுகத்தின் மோதலினால் கொஞ்சநஞ்சம் இருந்தவர்களும் விடைபெறலாயினர். இளைஞர் என்றால் அவர்களை அழைத்து அவர்கள் ஐயங்களைப் போக்கி அவர்கள் இதில் ஈடுபடுமாறு செய்ய வேண்டியது நம் கடமையன்றோ! வீடுபற்றி எரிகையில் தண்ணிர் எங்கிருந்து வருகிறது? யார் கொணர்ந்தார் என்று நாம் இதுவரை ஆராய்ச்சி நடத்தி வந்தோம். டாக்டர் ஜி.யூ. போப்பையர் திருவாசகத்தில் ஒரு வரி எழுதினாலும் கண்ணிர் விடாமல் எழுத முடியவில்லை என்று இறுதிக் காலத்தே கூடக் கூறினார். பூஜ்யர் கிங்ஸ் பரியை யானே அறிவேன். திருவாசகத்தை அவர் எப்பொழுதும் கண்ணிருடன் ஒதிக்கொண்டே இருப்பார். அவர்கள் சைவரில்லையென்றால் வேறு சைவர்கள் தாம் J了方? இனியாவது இந்நிலை நீங்கவேண்டும். உண்மையான ஆர்வம் ஒன்றுமட்டுமே தேவை. தம்துயர் துடைக்க வேண்டும் என்ற எண்ண்த்தால் உந்தப் பெற்றவர் யாவராயினும் அவர்கள் அனைவரும் திருமுறைகளைப் படிப்பதற்கும் அதில் ஈடுபடுவதற்கும் அதிகாரிகளேயாவர் 1972-க்குமட்டுமன்று 2972-க்கும்வேண்டிய புத்துணர்ச்சிக் கருத்துகளுடன் மிளர்வது சைவமும் திருமுறைகளும். மூடநம்பிக்கைகள் பழைய கண்மூடிப் பழக்கங்கள் என்னும் போர்வைகளை அதன் மேலிட்டு அது ய்ாருக்கும் பயன்படாமல் செய்துவிடும் பணியை நாம் செய்யாம்ல் இருத்தல் வேண்டும் என்று உங்களைத்தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். 口