பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பது, பதினொன்றாம் திருமுறைகள் சைனம், வைணவம் என்ற சமயங்களைப் பொறுத்த மட்டில் கி. பி. 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி 12 ஆம் நூற்றாண்டு வரை ஒவ்வொரு நூற்றாண்டிலும் அச்சம. யங்களுக்குரிய நூல்கள் தோன்றின என்று கூறவியலாது. ஆனால், சைவத்தைப் பொறுத்தமட்டில் கி. பி. 5 ஆம் நூற்றாண்டு எனக் கூறத்தக்க காரைக்கால் அம்மையார் காலந்தொட்டு 12ஆம் நூற்றாண்டு முடியச் சைவ சமய நூல்கள் தோன்றி வந்துள்ளன. கி. பி. 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரைத் தேவார திருவாசகங்கள் 10 முதல் 12 வரை திருவிசைப்பா, பதினொன்றாம் திருமுறை, 12ம் திருமுறை எனப்படும் பெரியபுராணம் என்பவை இக்கால எல்லையில் தோன்றியவை. இசை, இயல் தொகுப்புகள் : கி. பி. பத்தாம் நூற்றாண்டில் கண்டராதித்தர், திரு. மாளிகைத் தேவர், சேந்தனார், வேணாட்டிகள், திருவாலி யமுதனார் ஆகிய ஐவரும் பதினொன்றாம் நூற்றாண்டில், பூந்துருத்தி நம்பி காடவ நம்பி, புருடோத்தம நம்பி, சேதி ராயர், கருவூர்த் தேவர் ஆகியோரும் வாழ்ந்தனர்' எனலாம் 1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு-10. ஆம் நூற்றாண்டு, பக். 442.