பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 153 இப்பெருமக்கள்பாடிய 29 பதிகங்களில் 28 பதிகங்கள் திருஇசைப்பா என்றும் ஒன்று திருப்பல்லாண்டு என்றும் வகுக்கப் பெற்றதுடன் இவை முழுதும் 9 ஆம்திருமுறை என்று வழங்கலாயிற்று, இதனை 9 ஆம் திருமுறை என்று கூறியது பொருத்தமே. ஏன் எனில் முதல் 8 திருமுறை களும் (திருக்கோவை நீங்கலாக) இசைப்பாடல் எனக் கூறப்படுபவை. எனவே இசைப்பாடல்களாயமைந்த இசைப்பா 9-வது திருமுறையாக வகைப்படுதல் சரியே. ஏனைய மூன்றும் இயற்பாடல்களேயாம். இனி 10-வது திருமுறையாக உள்ள திருமந்திரமும் ஒருவர் இயற்றியதே. எனவே 12 திருமுறைகள் என்ப வற்றுள் பலரால் பாடப்பெற்றுத் தொகுக்கப் பெற்ற திருமுறைகள் 9, 11 ஆகிய இரண்டுமேயாம். 11-ஆம் திருமுறை : அடுத்து 11-ஆம் திருமுறை இறையனார் முதலாக நம்பியாண்டார் நம்பி ஈறாக உள்ள 12 ஆசிரியர்களால் பாடப்பெற்ற 40 நூல்களின் தொகுப்பாகும். இவர்கள் பல்வேறு காலங்களின் வாழ்ந்தவர்களாவர். இவர்கள் ஒரே ஒரு பிரபந்தம் இயற்றிய பரணதேவர், இளம் பெரு மாண்டிகள், அதிராவடிகள் ஆகிய மூவர் முதல் 10 நூல்கள் இயற்றிய நம்பியாண்டார் நம்பி உள்பட பன்னிருவர் ஆவர். இவ்விரு தொகுப்பு நூல்களையும் பற்றி விரிவாகக் கானு முன்னர் இவை தோன்றிய காலம், சூழ்நிலை முதலியவற்றை ஆராய்வது பயனுடையதாகும். அவ் வாராய்ச்சி சில உண்மையான ஐயங்களையும் தோற்று. விக்கிறது. அந்த ஐயங்கட் குஎன்னால் விடை காண முடிய வில்லை. இங்குள்ள பெரியோர்கள் கவனத்திற்கு இவ் ஐயங்களைக் கொண்டு வருவதே என்னுடைய நோக்கமாகும்.