154 டு அ. ச. ஞானசம்பந்தன் சில ஐயங்கள் : முதலாவது ஐயம் இதுவரை நாம் கூறி வந்தபடி இராசராசன் முதலாய சோழர்கள் உண்மையில் தமிழ்ச் சமய இலக்கியங்களைப் போற்றினரா? அல்லது அவர்க ளையும் மீறி இவை வளர்ந்தனவா? என்பதாகும். இரண்டாவது ஐயம் இத் திருமுறைகளை நம்பி யாண்டார் நம்பி இராசராசன் வேண்டுகோட் கிணங்கித் தான் தொகுத்தாரா? அப்படியே தொகுத்திருப்பின் தாம் பாடியுள்ள 10 பிரபந்தங்களை அவற்றுடன் சேர்க்கும் அளவிற்குத் துணிந்திருப்பாரா? என்பதாகும். திருமுறை வெளியீடு : தேவார திருவாசகங்கள் தோன்றிய பின்னர் அவை போன்ற பாடல்கள் ஒன்றரை நூற்றாண்டுக் காலம் தோன்றவில்லை என்பது தெளிவு. மேலும் நால்வர் பாடல்களில் புறச்சமயங்களாகிய சமணம் பெளத்தம் என்பவை வலுவாகவும் மென்மையாகவும் தாக்கப்படு கின்றன. 9-ஆம் திருமுறையில் அக்குறிப்பு எதுவும் இல்லை. எனவே அச்சமயங்கள் இரண்டும் தமிழ் நாட்டை பொறுத்தவரை வலுவிழந்து விட்டன என்று கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. அதனால்தான் அச் சமயங்கள் பற்றிய குறிப்பு ஒன்றும் இசைப்பாவில் இடம் பெறவில்லை. முதலாம் இராசராசன் ஒருசிலர் பாடிய தேவாரப் பதிகங்களைக் கேட்டு அவற்றை முழுவதும் பெற வேண்டி நம்பியின் துணையுடன் பெற்றான் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அக்கதையில் முதல் ஏழு திருமுறைகளும் சிதம்பரத்தில் ஒர் அறையில் வைத்துப் பூட்டப்பெற்றிருந்தனவென்றும் தில்லை வாழ் அந்தணர்கள் மூவரும் வந்தால் ஒழிய அவ்வறையைத் திறக்கக்கூடாது என்று கூறி விட்டனர் என்றும், இராச ராசன் மூவர் படிமம் செய்து அவ்வறையின் எதிரே
பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/167
Appearance