பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 155 நிறுத்தி அவர்களைத் திறக்குமாறு பணித்தான் என்றும் அப்புராணம் கூறுகிறது. பதியம் விண்ணப்பித்தவர் பெயர்ப் புதுமை : இதில் புதுமை என்னையெனில் தேவாரப் பதிகங் களை இறைவன் முன்னர் ஒதுதற்கு 48 ஒதுவார்களையும் பக்க வாத்தியம் வாசிக்கின்றவர்களையும் தான் நியமித்த தாக முதல் இராசராசனே அவனுடைய கல்வெட்டில் கூறியுள்ளான். இவர்களுடைய ஆண்டுச்சம்பளம்90 கலம் நெல்லாகும். இந்த 48 பேர்களுடைய பெயர்களும் ஞான சிவன், சதாசிவன், பூர்வசிவன், வாமசிவன், சத்யசிவன், தத்புருஷசிவன், அகோரசிவன், ருத்ரசிவன் என்பன போன்றே முடிகின்றன. இவ்விறுதிப் பெயர்கள் அவர் களுடைய தீட்சாநாமம் எனக் கூறப்படுகிறது. மூவர் முதலிகள் பெயாகள் இப்பிடாரர்கள் இயற்பெயராக வருகின்றன. ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்திர சிவன் (44), பொற்சுவரன் நம்பியாரூரனான தர்மசிவன் (43), சிவக் கொழுந்து சம்பந்தனான அகோரசிவன் (37) பலர் மூவர் பெயருடன் இறுதியில் ஒரு பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர். கல்வெட்டில் இல்லை இவ்வளவு விவரங்களைக் கல்வெட்டில் கூறிய இராசராசன் தேவாரங்களைத்தான் சிறை மீட்டிருப்பின் சொல்லாமற் போயிருப்பானா? அவன் கி. பி. 985 முதல் 1014 வரை 29 ஆண்டுகளே ஆட்சி செய்திருக்கிறான். இக்கால எல்லையில் பற்பல போர்கள் புரிந்து சோழப் பேரரசை விரிவுபடுத்தினான். அவனுடைய பிரதாபங் களை விரித்துக் கூறும் பரசஸ்தியில் அவனுடைய பல்வேறு வெற்றிகளும் பேசப்பட்டுள்ளனவே தவிர இப்பெருங் காரியம் பேசப்படவில்லை. தேவாரப் பதிகங்களைக் கண்டு எடுத்தவன் அவனாயின் இதனைவிடக் கல்வெட்டு