156 0 அ. ச. ஞானசம்பந்தன் களில் பொறிக்கக் கூடிய சிறப்புப் பொருந்திய செய்தி வேறு எதுவுண்டு? பிறவிடங்களில் இது பற்றிக் கூறா விடினும் பதியம் விண்ணப்பஞ்செய்கிறவர்கள் பட்டியல் தந்தவிடத்திலாவது குறித்திருக்கலாம். பதிகம் ஓதல் பழைய மரபே : அப்படியே பார்த்தாலும் தேவாரப் பதியங்களைத் திருக்கோயில் விண்ணப்பம் செய்யும் வழக்கத்தை இவன் தான் முதன் முதலில் ஏற்பாடு செய்தான் என்றும் கூறுவதற்கில்லை. இவனுக்கு ஏறத்தாழ நூறாண்டிற்கு முன்னரே முதற்பராந்தகன் நாள்தோறும் பூசாகாலத்தில் திருப்பதியம் பாடும் ஏற்பாட் டை லால்குடியிலும் அள்ளுரிலும் செய்திருந்தான் எனக் கல்வெட்டால் அறிகிறோம்." பராந்தகனுக்கும் முற்பட்டவனாகிய விஜய நந்தி விக்கிரமனாகிய பல்லவமன்னன் திருவல்லம்’ என்ற ஊரில் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்து அவ்வாறு செய்பவர்களின் பெயர்ப் பட்டியலையும் தந்துள்ளான். நம்பியாண்டார் நம்பி எந்தக்காலத்தில் வாழ்ந்திருப்பினும் அவர்தாம் திருமுறைகளை வெளிக் கொணர்ந்தார் என்ற கதை பொருளற்றதாகிறது.மேலும் திருமுறை கண்ட புராணத்தில் இராசராசன் தன்னிடம் வந்தார் கூறிய ஓரிரண்டு பதிகங்களைக் கேட்டு அவற்றை முழுவதும் பெற விரும்பினான் என்று கூறுவதும் கட்டுக் கதையாகிறது. பல்லவனாகிய விஜய விக்கிரமன் காலத் தில் பதியம் விண்ணப்பிப்பவர்கள் பெயர்ப் பட்டியல் இடம் பெற்றால் ஒன்றிரண்டு பதிகங்களே பழக்கத்தில் 1. K.A.N., Colas, P.637 (37.3 of 1903 and 99 of 1929) - 2. K. A.N., Colas, P. 637 (511 of iii, p. 93. ll. , 32, 33)
பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/169
Appearance