பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 157 இருந்தன என்ற கதை பொருத்தமற்றது என அறிய முடிகிறது. இதைவிட முக்கியமான ஒன்றும் கவனிக்கப்படல் வேண்டும். முதற் பராந்தகன் காலத்துக் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் செய்திகள் சில உண்டு. இவன் காலத்தேயிருந்து திருப்பதியம் முறையாகக் கோயில்களில் ஒதும் பழக்கம் ஏற்பட்டது. இவன் கல்வெட்டுக்களி லிருந்து இவன் காலத்தில் திருவாதவூராளிநாயனார் (மணிவாசகர்) அருளிய திருவெம்பாவை திருச்சாழல் முதலியன நன்கு அறியப்பெற்றிருந்தன என்றும் தெரி கிறது. எனவே இராசராசன் காலத்தே நம்பி மூலமே இவை வெளிவந்தன என்ற கூற்றுப் பொருத்தமற்ற தாகவே படுகிறது. எனவே இராசராசன் திருப்பதியம் விண்ணப்பம் ஒதுவார்களை நியமித்ததும், அவர்கள் பெயர்ப் பட்டியல் கொடுத்ததும் புதுமையானதன்று. இவை இரண்டுமே அவனுக்கு நூறாண்டுகளின் முன்னர்த் தொட்டு நடை பெற்று வந்த பழக்கங்கள் ஆகும். சோழர் சமயம் யாது? இந் நிலையில் இடைக்காலச் சோழர்களுடைய சமயம் பற்றி ஒரு சிறிது அறிவது பயன்தரும். விஜயாலயன் தொடங்கி இவர்கள் அனைவரும் சைவர்களாகவே இருப் பினும் பிற சமயங்களையும் போற்றி வளர்ப்பவர் களாகவே இருந்தனர். புற சமயங்களைக்கூடப் போற்றிய பெருமையுடைய இவர்கள் சைவ சமயத்தில் காணப் பெற்ற பல்வேறு பிரிவுகளுள் எப்பிரிவைப் போற்றினர் 1. K.A.N. Colas, p. 658 (129 of 1914; 349 of 1 9 11 etc. )