பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 0 அ. ச. ஞானசம்பந்தன் சோழர் காலத்தில் அமோகமாக வளர்ந்த இந்த இடங்கள், குகைகள் என்பவற்றுள் லகுலீசபாசுபதம் போன்ற பிரிவினர், மடங்களிலும் அப்பட்டமான காளா முகர் குகைகளிலும் வாழ்ந்திருத்தல் கூடும். நாளா வட்டத்தில் இவற்றிடையே வேறுபாடுகள் குறைந்து போயினும் இவர்கள் செல்வாக்குக் குறைந்ததாகத் தெரிய வில்லை. - குகையிடி கலகம் : இந்நிலையில் குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1200இல் குகையிடி கலகம்” என்ற பெயருடன் ஒரு புரட்சி தோன்றிற்று. திருத்துறைப் பூண்டியில் இருந்த குகைகள் பெரிதும் நாசப்படுத்தப் பெற்றன. வரலாறுகளும் கல் வெட்டுக்களும் இதுபற்றி விரிவாகப் பேசவில்லை எனினும் இந்நிகழ்ச்சி எங்கோ ஓரிடத்தில் மட்டும் நடை பெற்றதன்று. ஓரிடத்தில் ஒரு சமயம் நிகழ்ந்திருந்தால் "குகையிடி கலகம்' என்ற பட்டப் பெயரைத் தந்திருக்க மாட்டார்கள். எனவே இது தொடர்ந்து நடைபெற்ற ஒரு கலகம் என்றே கொள்ள வேண்டும். கன்னட, தெலுங்கு நாடுகளில் காளாமுகர்பிடி விடுதலை : குகையில் இருந்த காளாமுகர்களை அழிப்பதே இக் கலகத்தின் நோக்கமாதல் வேண்டும். ஒன்று முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இத்தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் கன்னடம் தெலுங்கு நாடுகளிலும் 1. K.A. N. Coas P 651. 2. K.A.N.—Colas - P. 653,