பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 9 161 இவர்கள் செல்வாக்கு பரவி இருந்ததாகத் தெரிகிறது: .கி.பி. 1156 ஐ ஒட்டிக் கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கலசூரி பிஜ்ஜலா மன்னனிடம் அமைச்சராய் இருந்த பசவர் காளாமுகர் பிடியை ஒழித்து வீர சைவத்தை நிலை நாட்டியதும், இக்காலத்தில்தான். இதே நேரத்தில் தெலுங்கு நாட்டில் காளாமுகர் பிடியி லிருந்து விடுபட்டு ஆராத்ய சைவம் வளரலாயிற்று. சோழர் போற்றியது காளாமுகச் சைவமே: தமிழ்நாட்டில் நிகழ்ந்த குகையிடி கலகமும் கன்னட நாட்டு வீரசைவமும் தெலுங்கு நாட்டின் ஆராத்ய சைவமும் காளாமுகரை எதிர்த்து நிகழ்ந்த புரட்சியின் விளைவேயாகும். இடைக்காலச் சோழர் இராசராசன் தொடங்கி இரண்டாம் குலோத்துங்கன் வரைக் காளா முகரைப் போற்றினர் என்றால் இவர்கள் சமயத்தை வளர்த்தனர் என்று கூறலாமே தவிர, முழுமூச்சுடன் தமிழர் கண்ட சைவத்தை வளர்த்தனர் என்று கூற ஒண்ணாது. . இராசராசன்தான் திருமுறை கண்டான் என்பதைப் பலரும் இன்று ஏற்றுக்கொள்ளினும் அது நன்கு நிறுவப் பட்ட ஒன்றன்று. முதலாவதாக அவன் இப்பெரு நிகழ்ச்சி யைத் தன்னுடைய கல்வெட்டுக்களில் யாண்டுங் குறிப்பிட வில்லை. இரண்டாவதாக 48 பிடாரர்களை வைத்துத் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய நிபந்தங்கள் வழங் கினான். அவன் என்னில் அவன் காலத்துக்கு முன்னரே திருப்பதிகங்கள் பெருவழக்காய்த் தமிழ்நாட்டில் இருந் திருத்தல் வேண்டும். திருமுறை கண்ட புராணம் : திருமுறை கண்ட புராணத்தை ஆதாரமாகக் கொண் டால் இவை வெளிக்கொணரப் பெற்றுச் சிதலையின் 1. K.A.N. — A History of South India, p. 435,436. 1. 1 سم . لا. تقع