பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 இ. அ. ச. ஞானசம்பந்தன் பிடியிலிருந்து இவற்றை வெளிப்படுத்திப் பின்னர் திரு. நீலகண்ட யாழப்பாணரின் வழி வந்த ஒரு பெருமாட்டி யின் உதவியால் இசை வகுக்கப்பெற்றன என்று அறி கிறோம். இக்கதை எத்துணைத் தூரம் நம்புவதற்குரியது என்பது ஒருபுறம் இருக்க இக்கதையிலிருந்து அறியப்படு வனவற்றையுங் காண்டல் வேண்டும். தில்லையந்தணர் யார்? முதலாவது தில்லை வாழ் அந்தணர் எனப்படுவோரில் பலரும் காளாமுகப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ அன்றிச் சோழனால் வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பெற்றவர்களாகவோ இருந்திருத்தல் வேண்டும். இவர்கள் நால்வரைப் போற்றும் மரபுடையவர் அல்லர் என்பது இன்று கூட இவர்கள் நால்வர் பெயர்களைத் தாம் வைத்துக் கொள்வதில்லை என்பதனால் அறியலாம். என்றாலும் ஏதோ ஒரு மன்னனே (இராசராசன் அல்லா மல் அவன் முன்னோருள் ஒருவன்) நேரே வந்து தேவா ரங்களை வெளிக்கொணர வேண்டும் என்று கூறுகையில் இவ்வந்தணர்கள் வேறு வழி இல்லாமல், செங்கோலுக்குப் பயந்து, ஆனால் அதே நேரத்தில் முடிந்தவரை தடை செய்ய முயன்றனர். எவ்வாறு இதனைத் தடை செய்ய லாம் என்று ஆராய்ந்து அவர்கள் இறுதியாக ஒரு சிறந்த வழியை மேற்கொண் ன்டர். மூவர் வைத்துப் போன வற்றை அவர்களே வந்தால் ஒழிய வெளியே எடுக்க உரிமை இல்லை என வாதிட் னர். ஆனால் மன்னர் மூவர் படிமங்களைக் கொண்டு வந்து எதிரே நிறுத்திய வுடன் அவை வெறும் படிபங்கள் என்று கூற அவர்கட்கு நெஞ்சில் உறுதி இல்லை. அப்படிக் கூறினால் அவர்கள் வழிபடும் இறைவனும் படி பந்தானே என்று கூற வாய்ப் பாகி விடும். - பண் அமைத்த கதையின் உட்பொருள் : தில்லைவாழ் அந்தணர் - ள் இத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்திருப் ன் இந்நிலை நேர்ந்திருக்க.