பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 163 நியாயமில்லை. அவருள் பலர் சோழர்களால் தமிழ் நாட்டில் குடியேற்றப் பெற்ற வடவர்களாக இருந் திருத்தல் கூடுமோ என்ற ஐயமும் தோன்றுகிறது. மேலும் வெளியில் எடுக்கப் பெற்ற தேவார ஏடுகள் கரையான் உண்டு எஞ்சியவையே எனவும் அவ்வரலாறு கூறுகிறது. அவ்வாறாயின் இவற்றிற்குப் பின் அமைக்க வேண்டிய பொறுப்பு யாருடையது என்ற வினாத் தோன்றியவுடன் தில்லைக் கூத்தன் திருவருள் புரிந்ததாக அறிகிறோம். திருஞான சம்பந்தருடன் யாழ் வாசிக்கும் பணியை மேற்கொண்டிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மரபில் வந்த ஒரு பெருமாட்டியை கூத்தன் திருவருள் அறிவிக்க அழைத்து வந்து பண் அமைத்தனர் என்றும் அறிகிறோம். கதையின் இப்பகுதியும் ஓர் உண்மையை அறிவுறுத்து கிறதோ என்று ஐயப்பட வேண்டியுளது தேவாரங்கள் காளாமுகத் தொடர்புடையோரால் ஏற்கப்படாமல் ஆனால் அதே நேரத்தில் யாழ்ப்பாணர் முதலிய தமிழர் களால் இசை அமைப்புடன் போற்றிப் பாதுகாக்க ப் பட்டன என்றும் நினைக்கத் தோன்றுகிறது இராசராசனல் முடியக் கூடியதா ? இக்கதை உண்மையாயின் இவ்வளவு செயல்களையும் செய்த பின்னர் இராசராசன் காலத்திலேயே தேவாரப் பதியம் ஒதும் பிடாரர்கள் நாற்பத்தெண்மரைத் தஞ்சைக் கோவிலில் அமைத்தான் என்றால் அவனுடைய 29 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இது முடியக்கூடியதா என்பதும் ஆராய்ச்சிக்கு உரியது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கட்டி முடிந்தது இராசராசனின் ஆட்சியாண்டு 25-நாள் 275ல் என்று கல்வெட்டுப் பேசுகிறது இக்கோயில் முடிந்த பின்னர் அவன் மூன்று ஆண்டுகளே வாழ்ந் துள்ளான். இதில் திருமுறை கண்டு, இசை வகுத்து அவற்