பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 0 அ. ச. ஞானசம்பந்தன் றைக் கோயிலில் பாடச் செய்தான் என்பது ஏற்கக் கூடிய தாய்த் தெரியவில்லை. மேலும் இக்கோயிலில் உடைய வரை நிலைநிறுத்த உதவியவர் கருவூர்த்தேவர் என்ற சித்தராவார். அவரே திருவிசைப்பாவில் இராசராசேச் சுரம் பற்றி ஒரு பதிகம் பாடியுள்ளார். இராசராசன் திருமுறை கண்டது உண்மையானால், நம்பிகள் அவர் காலத்தவர் என்றால் உடனிருந்த கருவூர்த்தேவர் திருமுறை கண்ட நிகழ்ச்சி பற்றியோ, நம்பிகளைப் பற்றியோ ஒரு குறிப்பும் கூறாமல் போனது வியப்பே. நம்பி காலம் பற்றிய கருத்து வேறுபாடு : இந்நிலையில் திரு. சதாசிவப் பண்டாரத்தவர்கள் கூறியுள்ளபடி நம்பிகள் வாழ்ந்தது முதல் ஆதித்தசோழன் காலமாகிய (871 - 907 ) ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. திருத் தொண்டர் திருவந்தாதியில் புகழ்த்சோழ நாயனார் (50) இடங்கழி நாயனார் (65) கோச்செங்கணான் (82) ஆகிய மூவரையும் தம் காலத்து வாழ்ந்த சோழனுடைய முன்னோர்கள் என்று பாடுகிறார். தம் காலத்து வாழ்ந்த சோழனைக் குறிப்பிடுகையில் சிங்கள நாடு பொடி படுத்தோன் (50), சிற்றம்பலம் கொங்கில் கனகம் அணிந்த ஆதித்தன் குவமுதலோன் (65), செம்பொன் அணிந்து சிற்றம்பலத்தைச் சிவலோகம் எய்தி (82) என்றும் கூறுகிறார். இவர் இராசராசன் காலத்திருந் திருப்பின் இரண்டு பாடல்களிலும் பொன்வேய்ந்த செய் தியும் ஆதித்தன் என்ற பெயரையும் வைத்துப் பாட நியாயமில்லை. - எனவே நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த காலம் முதலாம் ஆதித்தன் காலம் எனக் கூறலாம்.