பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும்பக்தியும் 0 165 கம்பியின் அந்தாதி வழி : திரு. பண்டாரத்தாரின் இக் கருத்தை வன்மையாக மறுக்கும் திரு. மு. அருணாசலம் அவர்கள் நம்பியின் ‘புலமன்னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்து' என வரும் பகுதியைக் காட்டி முதலாம் ஆதித்தன் சிங்களத்தை வென்றதாகக் கல்வெட்டு ஆதாரம் யாதுமில்லை எனவே சிங்களாந்தகன் என்ற விருதுப் பெயருடைய முதல் இராசராசனையே இது குறிக்கும் என வாதாடுகிறார். மேலும் கல்வெட்டாதாரமின்மையின் இதனை ஏற்கலா காது எனக் கூறும் பொழுது அதற்கு இராசராசன் கல் வெட்டில் ஆதாரமின்றேனும் நம்புவதில் தடை இல்லை என்கிறார். இருவருக்கும் முழு ஆதாரமில்லை: நம்பியின் பாடல்கள் மூன்றில் இரண்டு விஷயம் கூறப் பெறுகிறது. முதற்பாடலில் ஈழ நாட்டை வென்றதும், இரண்டு மூன்றாம் பாடல்களில் அம்பலம் பொன் வேய்ந்த ததும் பேசப்படுகின்றன. இதில் புதுமை யாதெனில் முதலாம் ஆதித்தன் அம்பலம் பொன் வேய்ந்தான்: ஆனால் அவன் ஈழத்தை வென்றானா என்பது அறியப் படவில்லை. முதலாம் இராசராசன் ஈழத்தை வென்றான்; ஆனால் பொன்னம்பலம் பொன், வேய்ந்தானா என்பது அறியப்படவில்லை. எனவே திரு. பண்டாரத்தார்; திரு. மு. அருணாசலம் அவர்கள் இருவர் கொள்கையும் முற்றிலும் நிறுவப் பெற்றன என்று கூறுதற்கில்லை. காளாமுகர் செல்வாக்கு : . . . இதற்கிடையில் இவர்கள் இருவரும் கூறாமல் விட்ட தும் இக்கட்டுரையில் ஆராயப்படுவதுமாகிய காளாமுகர் செல்வாக்கைப் பற்றிச் சிந்திக்கவேண்டும் இராசராசன் 1. தமிழ் இலக்கிய வரலாறு, 11 ஆம் நூற்றாண்டு. மு. அ. ப. 301 -