பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இ. அ. ச. ஞானசம்பந்தன் நம்பியாண்டார் நம்பி போன்ற சிவனருட் செல்வர் ஒரு வரை அறிந்திருப்பின் சர்வ சிவாச்சாரியார்' என்ற காளா முகரையும், ("மகாவர்த்தின்கள்') அவன் மகன் இராசேந்திரன் ஞான சிவாச்சாரியார்' என்ற காளாமுக ரையும் குலகுருவாகக் கொண்டிருந்ததுடன் அவருக்கு ஆயிரக்கணக்கான நிலங்களை ஆசார்ய போகமாக அளித்ததன் நோக்கம் யாது ? இது தவிர இராசேந்திரன் சாளுக்கியர்கள் ஆசார்யராகிய லகுலீச பண்டிதரை ஆதரித்ததுடன் அவருக்கும் நிரம்ப நிலங்கள் அளிந் துள்ளான். கல்வெட்டின்மை : இராசராசன் காலத்தில் நம்பிகள் துணைகொண்டு அவன் தேவாரங்களை வெளிக் கொணர்ந்திருப்பின் அத் தகைய மாபெருங்காரியத்தைப் பற்றிக் குறித்திடாமல் இருந்திருப்பானா என்பது ஆராய்ச்சிக்குரியது. தேவாரப் பதியங்களைத் திருக்கோயிலில் ஒதுவதற்கு 48 பேர்களை நியமித்து அவர்கள் ஒவ்வொருடைய பெயரையும் விடா மல் கல்வில் பொறிக்கச் செய்த சோழ மன்னன் இத் தனைக்கும் மூலமாக உள்ள தேவாரங்களைத் தான் வெளிக் கொணர்ந்ததைப் பொறிக்காமல் விட்டான் என் பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. கல்வெட்டில் நம்பி பெயரில்லை: அதுதான் விட்டான் என்றாலும் நம்பியின் உதவி யால் இதனைச் செய்திருப்பின் அந்த நம்பியைப் பற். றியோ அவர் திருமுறைகளை வகுத்த சிறப்பையோ குறிக் காமல் விட்டது சற்றும் நம்பமுடியாத ஒன்றாகும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது இராசராசன் காலத்தின் முன்னரே தேவாரத் திருமுறைகள் வகுக்கப்பெற்று நன்கு 1. KAN., Colas, p. 648