பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 8 167 பயின்று வந்தன என்று கொள்வதில் தவறு இல்லை. எனவே தான் அவன் திருகோயிலில் அவற்றை ஒதும் பணியைத் செய்வித்தான். இவன் செய்தது அது மட்டுமே ஆகலின், அதை மட்டும் பொறித்து வைத்தான். முதல் எழுதிருமுறைகள் : அப்படியானால் தேவாரங்கள் திருவாசகம் ( முதல் 8 திருமுறைகள் ) தவிர ஏனையவற்றை நம்பி தொகுத்தார் என்பது பொருந்தாக் கூற்றாய் முடியும். அப்படியே அவர் 11 திருமுறைகளைத் தொகுத்தார் எனக் கொள்வ தானால் அவர் தாம் பாடிய 10 நூல்களைப் பதினொன் றாந் திருமுறையில் தாமே சேர்த்துக் கொண்டார் என்ப தும் சரியாகப் படவில்லை. மேலும் அரசனே இதனை விரும்பியிருப்பினும் நம்பி போன்ற ஒருவர் தாம் பாடிய பாடல்களைத் தாமே திருமுறைகளில் சேர்த்துக் கொண் -டார் என்பது சற்று நம்புதற்கரியதாக உளது. திரு. மு. அருணாசலம் அவர் (த. இ. வர.. 11- ஆம் நூற் றாண்டு பக். 300) தம் நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுச் சைவ வைணவத்தில் இது மரபென்று கூறுவதும் ஞான சம்பந்தர் முதலியோரும் பல சுருதி பாடியுள்ளார் என்ப தும் ஏற்கக்கூடியவையன்று. தம் பாடல்களை விட உயர்ந் தவை என்று கருதி அவற்றைத்தொகுக்கும் ஒருவர் தம் முடையதையும் அவற்றுடன் சேர்த்தல் சிறப்பன்று. 9 முதல் 11 வரை பிற்காலத் தொகுப்பு : இதன் எதிராக நம்பி முதலாம் ஆதித்தன் காலத்தவர் என்ற பண்டாரத்தார் கருத்தை ஏற்றுக்கொண்டால் அவர் முதல் 7 அல்லது 8 திருமுறைகளை மட்டும் தொகுத் தார் என்று கொள்வதில் தவறு இல்லை. முன்னர் வந்தவர்கள் ஒருவரோ அன்றிப் பலரோ சேர்ந்து எஞ்சிய மூன்று திருமுறைகளை வகுத்தனர்.பத்தாம் நூற்றாண்டின் இறுதியிலும் 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு தோன்றின.