பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அ அ. ச. ஞானசம்பந்தன் இசைப்பா தோன்றக் காரணம் : அப்படியானால் இடைப்பட்ட 14 நூற்றாண்டுகளில் சைவ சமய சம்பந்தமான நூல்கள் எதுவும் தோன்றாமல் திடீரென்று 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் திருவிசைப்பா முழுவதும் தோன்றக் காரணம் யாது? ஆதித்தன் காலத்தில் அளவால் சிறுகி இருந்த காளாமுகர் செல்வாக்கு இராசராசன், இராசேந்திரன் காலத்தில் மிகவும் பெருகி வலுப்பெற்றுவிட்டது. அரசியலில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர் காளாமுகர்கள் என்பது முன்னரே குறிக்கப் பெற்றது. அவர்கள் இந் நாட்டுச் சைவத்திலும் மாறுபட்டவர்கள். கிரியைகளில் அதிகக் கவனம் செலுத்துபவர்கள்; வட நாட்டிலிருந்து வந்தமையின் வடமொழிமாட்டு அதிக ஈடுபாடு கொண்ட வர்கள்; கன்னட, தெலுங்கு நாடுகளிலும் தம் செல்வாக் கைப் பூரணமாகச் செலுத்தி வந்தனர்; 1200-இல் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தே குகை இடிக் கலகம் நடைபெற்றது என்பதும் அறியப்படுகிறது. திரு. சாஸ்திரியார் இது பற்றி ஒன்றும் அறியக்கூடவில்லை என்று கூறியுள்ளார். திரு. பண்டாரத்தார் கோளகி மடம் பிட் சாவிருத்தி மடம் ஆகியவை இடிபட்டன” என்று கூறுகிறார். இவற்றை ஆட்சி செய்தவர்கள் காளா முகர்கள். இவர்களை எதிர்த்து எழுந்த கிளர்ச்சியே குகை யிடிக் கலகமாகும். எதிர்ப்பின் மூலம் யார்? இவ்வெதிர்ப்பு ஏற்படக் காரணமாய் இருந்தவர்கள் யார்? முதலாம் இராசராசன் காலம் முதல் ஓங்கிவளர்ந்த செல்வாக்குடைய இக் காளாமுகர்களை எதிர்த்து இந் 1. KAN, Colas, p. 652. + 2. பிற்காலச் சோழர் சரித்திரம், சதாசிவப் பண்டா ரத்தார்.170.