பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 169. நாடடு பக்தி வழியைப் பரப்பினவர்களாகிய திருவிசைப் பாப் பாடிய அன்பர்களேயாவர். கருவூர்த்தேவர் முதலிய இவர்கள் தேவர் சித்தர் மரப்ைச் சேர்ந்தவர்கள். சித்தர்கள் கிரியைகளில் அதிக நம்பிக்கை வைக்காதவர்கள். ஞான வழியை மேற்கொண்ட சிவவாக்கியர் போன்றவர்களும், பக்தி வழியை மேற்கொண்ட கருவூர்த்தேவர் போன்றவர் களும் சித்தர் களத்தில் உண்டு. காளாமுகர் தொல்லையை எதிர்த்துப் புரட்சி நடத்திய இவர்கள் மேற்கொண்ட வழி மூவர் முதலிகள் மேற்கொண்ட பக்தி வழியேயாகும். இசைப்பா எவ்வாறு மக்களைத் துண்டிற்று? திருவிசைப்பாப் பாடல்களில் சிதம்பரம்,விழிமிழலை, ஆவடுதுறை, இடைகழி களந்தை ஆதித்தேச்சரம். கீழ்க் கோட்டுர் மணியம்பலம், முகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோழேச்சுரம், நாட்டியக்குடி தஞ்சை, ஆரூர், பூவணம் என்ற ஊர்களைப் பற்றிப்பாடப் பெற்றுள்ளன. இதில் பூவணம் நீங்கலாக எஞ்சியுள்ளவை அனைத்தும் சோழநாட்டில் உள்ளவை. எனவே சோழர் ஆட்சியில் அவர்களால் கட்டப்பெற்ற ஆதித்தேச்சரம், மணியம்பலம், முகத்தலை,திரைலோக்கிய சுந்தரம்,கங்கை கொண்ட சோழேச்சுரம், தஞ்சை ஆகிய ஊர்கள் பற்றி எழுந்தன. மன்னர்கள் தம் பெயரால் கட்டிய கோயில் கட்கும் சிறப்பு உண்டு என்று மக்கள் மத்தியிலும், மன்னர் மத்தியிலும் ஓர் எண்ணத்தை உருவாக்க இவை எழுந்தன. போலும். மூவர் செய்யாதது ஏன்? மூவர் முதலிகள் செய்யாத ஒரு காரியமாகும் இது. நம்பியாரூரராகிய சுந்தரர் பல்லவ மன்னர்கள் மாட்டுப் பேரன்பு பூண்டவர்தாம். அவர்கட்காக இரக்கங்கொண்டு: பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கஞ். செய்யும் புலியூர்ச் சிற்றம்பலம்'என்றுகூடப்பாடியுள்ளார்.