பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் .ே 7

  • மேலை நாடுகளில்

மேலைநாடுகளைப் பொறுத்தவரை நிலைமை ஓரளவு மாறுதலடைந்துள்ளது.அங்கு மாபெரும் தத்துவஞானிகள் வாழ்ந்தனர். இந்திய நாட்டைப் பொறுத்தவரை உபநிடத காலத்தில் இருந்த தத்துவ ஞானிகளைப்போல் இவர்களும் ஓயாத வினாக்களை எழுப்பி விடைகான முயன்றனர். காண்ட் (Kant), ஸ்பைனோஸா (Spinoza), மூர் (Moore) போன்றவர்கள் மாபெரும் அறிஞர்களா கவும், தத்துவ ஞானிகளாகவும் விளங்கினர். ஸ்பை னோஸ்ா தவிர ஏனையோர் உணர்வைக் காட்டிலும் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததே இவர்களிடம் உள்ள தனிச்சிறப்பாகும். இவர்கள் எல்லாவற்றையும் பரிசோதனை (empiri sisom) அடிப்படையிலேயே ஆராயவேண்டும் என்று தினைந்தனர். நம் நாட்டுப் பெரியோர்கள் கேட்ட அந்த வினாக்களையே அவர்களும் கேட்டனர். நான் யார் முதலான கேள்விகளையே அவர்களும் கேட்டார்களேனும் அவற்றிற்கு விடை காண அவர்கள் மேற்கொண்ட வழி வேறு; நம்மவர்கள் மேற்கொண்ட வழி வேறு. மணிவாசகர் போன்றவர்கள் நான் யார் முதலான வினாக்களை எழுப்பிவிட்டு இறுதியில் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் இவற்றிற்கு விடை கிடைக்காமல் போயிருக்கும் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் மேனாட்டுத் தத்துவ ஞானிகள் இத்தகைய முடிவுக்கு வர வில்லை. இவ்வாறு கூறுவதால் கடவுளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லையோ என்று நினைந்து இடர்ப்படவேண்டா அறிவின் துணைகொண்டே கடவுட் Quirósio Góesou (Intellectul Perception of divinity) நிலைநாட்ட முயன்றனர் அவர்கள், - இவர்களால் போற்றிப் பேசப்பெறும் அறிவு இரண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. காலணி தைக்கின்