பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 0 அ. ச. ஞானசம்பந்தன் றவர் பெற்றிருப்பதும் அறிவுதான். மிகச்சிறந்த வேலைப் பாடுகளுடன் அது தைக்கப்பெறும்பொழுது கூர்ந்த அறிவைக் காட்டி நிற்கிறது. ஆனால் உடற்கூற்றை அறிந் துள்ள மருத்துவருடையதையும் அறிவென்றே கூறு: கிறோம். இவை இரண்டும் அறிவு என்ற பொதுப் பெயருள் அடங்குமேனும் காலணி தைப்பவரின் அறிவை விட உடற்கூறு அறியும் மருத்துவரின் அறிவு சிறந்தது. என்று கூறுவதில் தவறில்லையன்றோ? இவ்விரண்டு பணி களில் எது முக்கியமானது என்ற வினாவிற்கு இங்கு இடமே இல்லை. காரணம், முக்கியம் அமுக்கியம் என்ற வேறுபாடு, சூழ்நிலை, சந்தர்ப்பம் என்பவற்றை அடிப் படையாகக் கொண்டுதான் தோன்றுகிறது. ஒரு சூழ்நிலை யில் ஓரிடத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒன்று, இடமும் சூழ்நிலையும் மாறிவிட்டபொழுது முக்கியமாகக் கருதப் பெறுவதில்லை. இத்தகைய அறிவு நன்கு வளர்ந்த நிலையில் பல வினாக்களை எழுப்பி அவற். றிற்கு விடைகாண முற்படுகிறது. தத்துவ ஞானமும், விஞ்ஞானமும் பிளேட்டோ காலத்தில் தோன்றிய இந்த அறிவு, தத்துவ ஆராய்ச்சியில் புகுந்து பணிசெய்யப் புறப்பட்டது. ஆனால் அது தொடங்கியபொழுது எத்திசையில் சொல்ல முனைந்ததோ அத் திசையை மாற்றி முற்றிலும் வேறு. திசைக்கு இந்த ஆராய்ச்சி அறிவை மாற்றிய பெருமை விஞ்ஞானத்திற்கே உரியது. உதாரணமாக மிகச்சிறந்த தத்துவ ஞானியாகிய டேவிட் ஹியூம் (David Hume), காலத்தில்தான் மாபெரும் விஞ்ஞானியாகிய நியூட்டன் (Newton) வாழ்ந்தார் நியூட்டனின் உலகப் புகழ்படைத்த Fsu 155& FLL—iölsáit Eupsirgy (Three laws of motion) எத்துணைத்துாரம் ஹியூமின் தத்துவ ஆராய்ச்சியைப் பாதித்தது என்பதை விரிவாக ஆராய்ந்துள்ளனர். விஞ்ஞான அறிவு வளர வளரத் தத்துவ ஞானிகளும்