பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் е go தம்முடைய ஆராச்சியின் அடிப்படையை மாற்றிக் கொள்ளத் துணிந்தனர். இன்னும் கூறவேண்டுமாயின் அரிஸ்டாட்டிலின் கணிதத்தில் தொடங்கித் தத்துவ மேதைகள் பூமியின் எடையைக் கணிப்பதுபோல சுவர்க்கத்தின் எடை, கடவுளின் உயரம், அவர் எங்கிருத்து எங்கே தம்முடைய கால்களை நீட்டிக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் அறிவின் துணைகொண்டே ஆய்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் அவர்களுடைய முயற்சியிலோ உண்மை காண வேண்டும் என்ற எண்ணத்திலோ எவ்விதக் குறையும் கூகமுடியாது. ஆனால் இவற்றை அறிய அவர்கள் மேற்கொண்ட வழிதான் விந்தையானது. எதனையும் அறிவின் துணைகொண்டுதான் காண வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டமையின் மனத்தின் அடிப்படையில் தோன்றும் எதற்கும் மதிப்பீடு (Values) தராமல் விட்டுவிட்டனர். பரிசேதனைத் தத்துவ வாதம் பற்றி திரு எஸ். இராதாகிருஷ்ணன் தம்முடைய 'நம்பிக்கையின் மீட்சி (Recovery of Faith) என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார். எம்பிரிசிசக் கொள்கை : எம்பிரிசிசம் (எதனையும் சோதனையின் அடிப்படை யில் நம்புவது) என்பது கீழ் மேல் நாட்டுத் தத்துவ விசாரணையில் விடாபிடியான ஒர் இடத்தைப் பெற்றுள்ளது. சமீபகாலம்,வரை, உற்றறிவு, அனுமானம் என்பற்றின் அடிப்படையில் மனித அறிவுபற்றிய தீர்க்கமான ஒரு கருதுகோளைக் கொண்டிருந்தது. ஆன்மீகக் கருத்துகள் பற்றியவற்றில் ஓர் அலட்சியமும் விஞ்ஞான வழிகளிடத்து ஒர் அலாதியான மதிப்பும் கொண்டிருந்தது. அதன் அடிப்படையான கொள்கை யில் மானிட இயல்புக்குப் பொருந்திய அறவொழுக்கம்