பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 0 அ. ச. ஞானசம்பந்தன் பற்றிய கொள்கையும், சமயத்தைப் பொறுத்தவரை நம்பிக்கையின்மையும் இருந்து வந்தது. இந்த வாதிகள் அனைத்துலகப் பார்வை பெற்றிருந்ததுடன் வாழ்க்கை, எண்ணவோட்டம் என்பவைபற்றியும் ஒரு குறிப்பிட்ட கொள்கை கொண்டிருந்தனர். அவர்களைப் பொருத்த மட்டில் மரபுவழித்தத்துவ வாதிகள் என்று கூறலாம். தனி மனிதன் உலகில் அவனுடைய இடம், அவன் எதிர்காலம் என்பவை பற்றியும் அவர்கள் குறிப்பிட்ட கொள்கை கொண்டிருந்தனர். புதிய எம்பிரிசிசக் கொள்கையாளர் ஆன்மீகம் பற்றிய எதனையும் ஏற்க மறுத்தனர். புலன் உணர்வுக்கோ அதன் நீட்சியாக உள்ள விஞ்ஞானக் கருவிகளுக்கோ கட்டுப் படாத எவற்றையும் உண்மை என்று இவர்கள் ஏற்ப தில்லை. ஜடத் தொடர்புடைய இந்த உலகம் பற்றிய விஞ்ஞான அறிவே உண்மையானது. உண்மையுடைய எதுவும் இந்தச் சட உலகுடன் தொடர்பு கொண்ட தாகவே இருத்தல் வேண்டும். நாம் காணவும் தொடவும் கூடியது சடப்பொருள் ஒன்று மட்டுமேயாம். தனிப்பட்ட மதிப்பீடுகள் என்று கூறுவதும், அழகை அனுபவிப்பதும் உண்மைக்குத்(Truth) தொடர்புடையன அல்ல. அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவது கற்பனை உலகில் ஈடுபடுவதாகவும் மனப் பிராந்தியில் உலவுவதாகவும் கூறினர். கண்காணாத ஆன்மீக உண்மை என்பது opå Gall-Gi'i luiflortenoropgol–uu (Three diamensional) நிலையியற் பொருள், காலத் தத்துவம் (Time) என்பவற் றின் போக்கில் தேவையற்று நுழையும் இடைப் பிறவர லாகும்.* .

  • Empiricism has been a persistent feature of philosophy, both in the East and in the west. Till recently it connoted a definite theory of human knowledge based on sensation and inference, a