பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் .ே 171 எனவே நம்முடைய முயற்சிக்கும் அப்பாற்பட்டுள்ள சித்தத்தில் அவன் தேனாகத் தித்திக்க வேண்டுமாயின் 'யான்' என்பதற்று நாம் அதுவாக ஆதல் வேண்டும். இதனைத் துரிய நிலைக்கண் எழும் அனுபவம் என்றும் 'அளிபவர் உள்ளத்து ஆனந்தக்கனி' என்பதற்கு அதீத நிலைக்கண் தோன்றுவது என்றும் பொருள் எழுதி யுள்ளனர். அளி, அன்பிற்கும் இரக்கத்திற்கும் ஒரு பெய ராகும். அன்புடையார் உள்ளத்தே இறைவன் இருப்பான் என்பதை விட்டுத் துரியாதீத நிலை என்றெல்லாம் பொருள் எழுதுவது நம் சாத்திர அறிவைக் காட்டப் பயன்படுமே தவிர நூலுக்கு உரையிட்டதாக ஆகாது. சமயிகள் வெறுப்பே தவிரச் சமய வெறுப்பன்று : இப்பெருமக்கள் சைவநெறி நிற்பினும் தமக்குப் புறம்பாகிய சமண, பெளத்தம் என்றவற்றையும் இறைவனே படைத்தான் என்பதை உறுதியாக நம்பினர். ஆனால் அவற்றைப் பின்பற்றுபவர்கள் தவறிழைத்தனர். ஆதலால் சமயிகளைக் கண்டிக்க நேர்ந்தது. இசைப்பா 8-வது பாடலில் புறஞ்சமண் புத்தர் பொய்கள் கண்டா யைத் தொண்டனேன் புணருமா புனரே என்று பாடி யுள்ளார் மாளிகைத்தேவர். இதே கருத்தைத் திருஞான சம்பந்தரும் இரும்பூளைத் தேவாரத்தில் துணை நன்மலர் துாய்த்தொழுது என்று தொடங்கி இறுதியடியில் ஈசன் அணைவில் சமண், சாக்கியம் ஆக்கியவாறே என்று கூறிப்போனார். - இசைப்பாவில் புதுமை : திருமாளிகைத் தேவரின் இரண்டாவது பதிகம் (உயர் கொடியாடை) அம்பலத்தானைப் பாதாதிகேசம் வருணிப்பதும் திருவாலியமுதனார் 22-வது பதிகத்தில் "மையல்மாதொருகூறன்' என்று தொடங்கிப் பாதாதி கேசம் வருணிப்பதும் திருவிசைப்பாவிற் காணப்பெறும்