பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 0 அ. ச. ஞானசம்பந்தன் புதுமை. 28 பதிகங்களில் 20 பதிகங்கள் அகத்துறையில் அமைந்துள்ளமை ஒருவகை வளர்ச்சியை அறிவிக்கும். தேவரின் கவிதைச் சிறப்பு: கருவூர்த் தேவரின் கீழ்வரும் பாடல் அவருடைய உறுதிப்பாட்டை நன்கு அறிவிக்கிறது. தத்தையங்கு அனையார் தங்கள்மேல் வைத்த தயாவை நூறாயிரங் கூறிட்டு அத்தில் அங்கு ஒருகூறு உன்கண் வைத்தவருக்கு அமருலகு அளிக்கும் நின்பெருமை...... — 14 0. உலகியலில் வைக்கும் பற்றில் இலட்சத்தில் ஒரு பங்கை இறைவன் மேல் வைத்தாலும் அவர்கட்கு தேவர் உலகை அளிப்பன் என்பதே இதன் பொருள். இதே கருத்தை உலகம்போற்றும் ஷேக்ஸ்பியர் தமது எட்டாவது ஹென்றி என்ற நாடகத்தில் அழகாகக் கூறுகிறார். “............... O Cromwell Had I but served my God with half the zeal I served my King, he would not in mine age Have {eft me naked to mine enemies’’ —Henry VII!. Act III Sc. 2. Line 455-57.. இறைவன் அழகு பேசல் ஏன் ? இலக்கிய நயம், கவிதைச் சிறப்பு, ஒசைநயம், பொருள் ஆழம், சிறப்புமிகு சொற்றொடர் ஆட்சி என்று. எடுத்துக் கொண்டால் கருவூர்த்தேவர் தனிச்சிறப்புடன் இலங்குகிறார். நீலமே கண்டம், பவளமே திருவாய், - நித்திலம் நிறைந்திலங்கினிவ்ே போலுமே முறுவல்; நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம்; ஒருவர்