பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் அ 173 கோலமே அச்சோ! அழகிதே என்று குழைவரே கண்டவர்; உண்ட தாலமே, ஆகில் அவர் இடம் களந்தை அணிதிகழ்ஆதித்தேச்சரமே –96 திருவிசைப்பாப் பாடல்களில் இறைவனின் மேனி அழகை அதிகம் வருணிப்பதும் கூடக் காளாமுகரின் கோர வடிவத்தை நினைவூட்டி மக்கள் மனத்தை அக்கொடிய காட்சியிலிருந்து திருப்பவே ஆகும என்றும், பெரும் பகுதிப் பாடல்கள் அகத்துறையில் அமைந்திருப்பதும் அழகுணர்ச்சியை அதிகப்படுத்தவே என்றும், நினைப் பதில் தவறு ஒன்றும் இல்லை. அகத்துறைப் பாடல்கள் அதிகம் : தேவார காலத்தில் அருகிக் காணப்பெறும் அகத் துறை இப்பொழுது பெரிய இடத்தைப் பெறுகிறது. 28 பதிகங்களில் 20 பதிகங்கள் அகத்துறையில் அமைந் திருப்பதே இவ்வுண்மையை வெளிப்படுத்தும். 'பத்தியாய் உணர்வார் அருளை வாய்மடுத்துப் பருகு தோறும் அமுதம் ஒத்து அவர்க்கே தித்தியாய் இருக்கும், தேவர்காள், இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர்!......... 184 سسه பவளமால் வரையைப் பனிபடர்ந்து அணையதோர் படர் ஒளி தருதிரு நீறும் - குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திருச் சடையும் –226 என்பன போன்ற அடிகள் இறைவன் திருவுரு அழகில் ஈடுபட்டுப் பாடப் பெற்றவை. ン *