பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 டு அ. ச. ஞானசம்பந்தன் அம்மையார் பாடல்களிலிருந்து நம்பியாண்டார் நம்பி பாடல்கள் வரை இதில் இடம் பெற்றுள்ளன. திருவால வாயுடையார் (11 காரைக்கால் அம்மை (4) ஐயடிகள் காடவர்கோன் (11, சேரமான் பெருமாள் 31, நக்கீர தேவ நாயனார் (91, சங்க நக்கீரர் (1], கல்லாட தேவர் [11, கபில தேவர் (31, பரணதேவர், இளம் பெருமா னடிகள், அதிராவடிகள் (ஒவ்வொன்று பட்டினத்துப் பிள்ளையார் (51, நம்பியாண்டார் நம்பி (10), என 12 பேர்களுடைய 40 நூல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பல குழப்பங்கள் : இவற்றுள் rேத்திரத் திருவெண்பா, கார் எட்டு என்பவையும் இடம் பெற்றுள்ளன. முதலதில் ஒவ்வோர் ஊரிலுள்ள இறைவனையும் ஏத்த வேண்டும் என்று கூறப் படுகிறது. இரண்டாவதில் கார் காலத்தை இறைவனோடு உவமித்துப் பாடியுள்ளது என்பதும் அறியப்படல் வேண்டும். எந்த அடிப்படையில் இவை பக்தி நூல்கள் ஆயின என்று அறியக்கூடவில்லை. சங்கப்பாடல் எனப் பெறும் திருமுருகாற்றுப்படையும் கார் எட்டையும், ஒருவரே பாடினார் என்று கருத்தில் இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இதனைத் தொகுத்தவர்கள் வெறும் பக்தி ஒன்றைமட்டும் துணையாகக் கொண்டு அன்று வழங்கிய கதைகளை யெல்லாம் ஏற்றுக் கொண்டு தொகுத்தனர் என்றே கூறத் தோன்றுகிறது. பலதரப் பாடல்கள் : இது ஒரு தொகுதி நூல் என்றாலும் இதில் காணப் பெறும் அனைத்தும் தரமான பக்திப் பாடலகள் என்று கூறுதற்கில்லை. இவை நம்பியால் தொகுக்கப் பெறறன என்பதற்கும் திருமுறைகண்ட புராணம் தவிர வேறு சான்றில்லை. காரைக்கால் அம்மையின் மூன்று நூல்கள்,