பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் e 171 சேரமானின் மூன்று நூல்கள், பட்டினத்துப் பிள்ளையின் 5 நூல்கள் ஆகியவை பக்திப் பாடல்களின் முதல் தரத்தில் நிற்கக் கூடியவை. நக்கீர தேவரின் கயிலைபாதி காளத்திபாதி சிறந்த ஒசை நயமுடைய வெண்பாக்களாலானது. ஒரளவு பக்தி யையும் கொண்டிலங்குவது. ஈங்கோய் மலை எழுபதில் இயற்கை வருணனை பெரிதும் இடங் கொண்டுள்ளது. வலஞ்சுழி மும்மணிக் கோவை சுவையுடன் அமைந்தது. அடுத்துள்ள திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவ பாணி என்பவை இடைக்காலப் பிரபந்தங்கள் வகையைச் சேர்ந்தன. சொற் சாலந் தவிர இதில் அதிகம் ஒன்றும் இல்லை. புதிய கருத்து-காளாமுகர் எதிர்ப்பே அடுத்துள்ள கோபப் பிரசாதத்தில் இரண்டு கருத்துக்கள் புதுமை உடையன. இதுவரை பக்தி நூல் களிற் காணப்படாத இக்கருத்துக்கள் இங்கு எவ்வாறு புகுந்தன என்பது ஆராயற் பாலது. 'கொச்சைத் தேவரைத் தேவர் என்று எண்ணிப் பிச்சரைப் போல ஒர் - ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று வட்டணை பேசுவார் மானுடம் போன்று பெட்டினை உரைப்போர் பேதையர்.' -கோபப்பிர, 30 முதல் 35 வரை. சிறு தெய்வங்களைப் பற்றிக் கொண்டு, சிவபெருமானை வழிபடாமல் வடமொழி தருக்கம் முதலியன பயின்று வெட்டியாகப் பேசும் மாக்களை இழித்துரைக்கும் இப் பகுதி. இதுவும் இக்கட்டுரையில் முன்னர்க் குறிக்கப் பெற்ற காளாமுகர்களைப் பற்றியதாகலாம் என்று நினைக்க வேண்டியுளது. ஆனால் இப்பகுதி அத்வைதம் த.ப.-12 -