பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அ அ. ச. ஞானசம்பந்தன் பரவி இருந்த நிலையைக் குறிக்கும் என திரு.மு. அருணா சலம் அவர்கள் கூறுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. 10-ஆம் நூற்றாண்டுகளில் அத்வைதம் தமிழ் நாட்டைப் பொறுத்த வரை இத்துணை வழக்குப் பெற்றிருந்தது என்பது பொருத்தமாகப் படவில்லை. மேலும் நக்கீரர் இவ்வரிகளை அடுத்து, நிலத்து உள் கலை மீன்தலை என்பலம் என்றால் அதனை அடுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின் (87-89) என்று பாடுகிறார். இந்த எடுத்துக் காட்டுக் காளாமுகர்களைப் பற்றி நினைக்கையில் பொருத்தமுடையதாகுமே தவிர அத்வைதிகளை நினைக்கையில் சரியாகாது. ஆடுபோலக் கூடி நின்றழைத்தும் (94) என்பதும் காளமுக, காபாலிக, கோளகி வழிபாட்டு முறைக்கே பொருத்தமுடைய தாகும். இதனை அடுத்து நக்கீரர் பெயரால் ஒரு திருக் கண்ணப்ப தேவர் திருமறமும், கல்லாடர் பெயரால் ஒரு திருமறமும் அமைந்துள்ளன. பதினோராந் திருமுறை முழுவதிலும் சிறந்த கவிதை என்றும், பக்தி பெருக்குடன் கூடிய சிறந்த கவிதை என்றும் பார்த்தால் பட்டினத்துப் யிள்ளையாரின் பாடல்கள் முதலாவதாக நிற்கும். நம்பி பாடல்: நம்பியாண்டார் நம்பியின் 10 நூல்களுள் ஆறு திரு ஞானசம்பந்தர் பற்றினவேயாகும். எனவே அவரிடத்து இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது வெளிப் படை. மேலும் ஞானசம்பந்தர் முதலியோர்பற்றிப் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் இவர் கூறும் பல செய்திகளைச் சேக்கிழார் பாடவில்லை நம்பி இராச ராசன் காலத்தில் வாழவில்லை. முதலாம் ஆதித்தன் காலத்தவரே என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.