பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 179 ஆதாரமற்ற தொகுப்பு: திரு. மு. அருணாசலம் அவர்கள் தம்முடைய தமிழ் இலக்கிய வரலாறு 11ஆம் நூற்றாண்டு என்ற நூலில் 329 ஆம் பக்கத்தில் 'பதினோராம் திருமுறைப் பிரபந் தங்கள் இவைதாம் என்று சொல்லியதற்கு எந்தப் பழைய ஆதாரமும் இல்லை. முதலில் அச்சிட்டவர் இப்போதுள்ள பிரபந்தங்களை அச்சிட்டார். தொடர்ந்து இவையே பதினோராந் திருமுறை என்று வழங்கி வருகின்றன’’ என்று கூறியுள்ளார். இக்கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்வதுடன் இத் தொகுப்பு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப் பெறவில்லை; 13ஆம் நூற்றாண்டு வாக்கில் யாரோ தொகுத்தார் என்றுதான் நினைய வேண் டியுளது நாளாவட்டத்தில் ஏடெழுதுவோர் பலர் கைங் கரியங்களும் இதில் இடம் பெற்றிருக்கலாம். முடிவுரை: இறுதியாக 9. 11ஆம் திருமுறைகள் எனப்படுபவை நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப் பெறவில்லை என்பதும், அவர் இராசராசன் காலத்து வாழவில்லை முதல் ஆதித்தன் காலத்தவர் என்பதும். 9ஆம் இருமுறை தோன்ற காளாமுகர் கொடுமையே காரணம் என்பதும் ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் தம் பாடல் மூலம் புரட்சி செய்தது போல 9ஆம் திருமுறையில் கி.பி. 1200ல் ஏற்பட்ட குகையிடிக் கலகம் போன்ற ஒரு புரட்சி ஏற்பட்டது என்பதும் விளங்கும். 口口口