பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 0 அ, ச. ஞானசம்பந்தன் படாதது மட்டுமன்று: இவ்வாறு மனத்தால் மட்டும் உணரக்கூடியவற்றிற்கு மதிப்புத் தருதல் பொருளற்ற ஒரு செயலாகும் எனவே கூறினர். ஹியூம் என்ற தத்துவ வாதியின் கொள்கைப்படி, 'தத்துவ ஆராய்ச்சி என்பது இருப்பதை விரித்துக் கூறுதலேயாகும். இதற்குமேல் முயல்வது மனித மனக்குழப்பத்தில் தோன்றும் கருத்துகளுக்கு வடிவு கொடுப்பதாகும்.' மூர் என்பவரின் கருத்துப்படி இவ்வாறு ஆராய முயல்வது மொழியைப் பயன்படுத்துவதனாலேயே விளைகிறது. எனவே ஏதாவதொரு தத்துவக் கொள்கை கூறப்பெற்றால் அது என்ன கூறுகிறது, எதைப்பற்றிக் கூறுகிறது என்ப வற்றை அறிய முயல வேண்டும். - ஒழுக்கம், சமயம் என்பவற்றின் கொள்கைகள் பற்றி ஆராய்வதோ அன்றி அவற்றிடையே தேர்ன்றியுள்ள முரண்பாடுகளை ஆய்வதோ தத்துவவாதியின் வேலை யன்று. தத்துவத்தின் பணி, இக்கொள்கைகள் உள்ளீடு அற்றவை, பைத்தியககாரத்தானமானவை, பயனற்ற சொற்கள் என்று காட்டுவதேயாகும். தத்துவத்தின் கடமை ஆராய்வதும் விளக்கந் தருவ துமேயாகும் ஏனைய ஆராய்ச்சிகளைப் போலத் தத்துவ ஆராய்ச்சியும் காரண காரிய வழியையும், சோதனை வழியையும்,பகுத்துக் காண்கின்ற வழியையும் மேற்கொள் வதாகும். மனித அறிவின் எல்லை யாது என்று கூறுவதும் பல்வேறு துறைகளிற் செல்லும் அவ்வறிவுகளின் இடையே உள்ள வேறுபாடுகளை எடுத்துக் காட்டுவதுமட்டுமே தத்துவத்தின் பணியாகும். - -

  • According to Hume, philosophical theories which attempt more than description rest on confusions arising from the working of the human mind. Moore thinks that they are all traceable to the use