பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 19 வியப்பதற் குரியதாகின்றதே தவிர வேறு எப்பயனை விளைத்தது? அவர் குடியரசு (Rebublic) என்ற நூலைத் தம் அறிவின் துணைகொண்டு மட்டுமே எழுதினார். ஆனால் அவர் எழுதுகின்ற அந்த நேரத்தில் கிரேக்க சமுதாயம் எவ்வாறு இருந்தது? பெரிய திறந்த அரங்கு களில் (amphitheatre) பசித்த சிங்கங்களிடையே அப்பாவி அடிமைகளைத் துாக்கிப்போட்டு அவ்விலங்குகள் அடிமை களைக் கொத்திக் குதறித் தின்கின்ற காட்சியை உயர் குடிப் பிறந்ததாகக் கூறிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் கண்டு களித்தனர். - அன்றைய சமுதாயம் இருந்த இந்த நிலைபற்றி அறிய முற்படாமல் பிளேட்டோ எழுதிய தத்துவஞானம் என்ன பயனை விளைத்தது? இன்று கிரேக்க நாகரிகத்திற்கு அவர் நூலோ சிந்தனையோ ஏதேனும் பயன் விளைத்ததா? உறுதியாக இல்லை. காரணம் யாது? தத்துவ ஆராய்ச்சி மனித வாழ்க்கையோடு ஒட்டி அமையவில்லை. மானிடச் Glþf5lzM6U (Human situations) L1 fö fölá G6Ugð)gvLn_1LITLogo தத்துவ ஆராய்ச்சி நடைபெறவேண்டும் என்று பிற். காலத்தில் ஹியூம் கூறியதைப் பிளேட்டோ அவருக்குப் பல்லாண்டு முன்னரே கடைப்பிடித்துவிட்டார். பிளேட்டோ, அரிஸ்டாட் டில், சாக்ரட்டீஸ் என்ற பெயர்களை நினைக்கும்பொழுதே உள்ளங் குளிருகின்ற அளவுக்கு மாபெரும் அறிஞர்களை, தத்துவஞானிகளைப் படைத்த கிரேக்க மக்களும், இலக்கியமும் இன்று என்ன ஆயின? ஏன் கிரேக்க நாகரிகத்திற்கு இந்நிலை வந்துள்ளது? எத்துணைப் பெரிய தத்துவ ஆராய்ச்சி யாயினும் அது மக்களோடு, உயிருள்ள, துடிப்புள்ள, கொள்கைகளோடு தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும். இன்றேல் அக் கொள்கைகள் கண்ணாடி அலமாரியில் வைத்து அழகு பார்க்கப்படும் செத்த பறவைகளாகவே முடியும். -