பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 0 அ. ச. ஞானசம்பந்தன் யைத் தாண்டிக் கண்ணிர் சிந்தக்கூடாது எனச் சமுதாய வாழ்க்கைக்கு ஏற்ப ஒரு சட்டம் வகுத்தான். பிறருடைய உரிமை கட்கு மதிப்புத் தரல்வேண்டும் என்ற உணர்வால் தோன்றிய மரபாகும் இது. இதனையடுத்து நல்லொழுக்கம் எது என்பதில் கிளைக்கும் கருத்து வேறுபாடுகளை ஆயவும் தேவை இல்லை என்று கூறுகிறார் ஹியூம்'. ஒரு கூட்டத்தார் நல்லது என்று மேற்கொள்ளுகிற ஒரு பழக்கத்தைத்தேவை இல்லாதது என்று நினைக்கிறது.மற்றொரு சமுதாயம். ஒரு மனைவிக்குமேல் மணப்பது தவறு என்று கூறுகிற சமுதாயமும், பலதாரமணத்தால் தவறில்லை என்று கூறுகிற சமுதாயமும் இங்கு உண்டு. ஆனால் இவற்றை எடுத்து ஆய்ந்து எது நலம் பயப்பது என்று கூறவேண்டிய கடமை தத்துவத்திற்கில்லை என்கிறார்கள் ஹியூம் போன்ற தத்துவவாதிகள். இதன் எதிராக, எந்த ஒன்றை யும் எடுத்து பகுத்துப் பார்த்து ஆராய்வதே தத்துவத்தின் பணி என்கிறார்கள் ஒரு சிலர். சோதனை மூலம் அதனை ஆய்ந்து மனித அறிவின் எல்லை எதுவரை என்பதை எடுத்துக் காட்டுவதுமட்டுமே தத்துவத்தின் பணியாம். மானிட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை ஆய்வது அதன் பணியன்று என்றும் கூறிப் போயினர்! சமுதாயத் தொடர்பின்மை : இதனால் விளையும் பயனைப்பற்றி அவர்கள் கவலை யுற்றதாகவே தெரியவில்லை. உதாரணமாகப் பிளேட் டோ போன்ற மாபெரும் தத்துவவாதியின் வாழ்க்கை. யைக் காணலாம். பிளேட்டோ என்ற தத்துவஞ | ன பிளேட்டோ என்ற மனிதனிடத்திலிருந்தும், அற்றைநாள் கிரேக்க சமுதாயத்திடமிருந்தும் தம்மை முற்றிலும் பிரித்துக்கொண்டு வாழ்ந்தார். சமுதாயத் தொடர்பில் லாத அவருடைய தத்துவ அறிவு இன்று கண்டு நம்மால்