பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 17 பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்'- 112 என்பது அகநானுTறு. தமிழன் கண்ட விடை : இத்தகைய வினாக்களுக்கு, அவை தத்துவத்தின் கீழ்ப்பட்டனவா, சமய உணர்வின் கீழ்ப்பட்டனவா என்பவைபற்றிக் கவலைப்படாமல் பழந்தமிழன் தன் உள்ளுணர்வு ஒன்றையே கொண்டு விடைகண்டான். உதாரணமாக ஒரு தலைவன் பொருள்தேடப் பிரிந்து செல்கிறான். அவன் தலைவிக்கு அது பெரு வருத்தத்தைச் செய்கின்ற ஒன்றுதான். என்றாலும் என்ன? அவளுடைய வருத்தத்தை வெளிகாட்ட அவளுக்கு உரிமை இல்லையா? உண்டுதான். ஆனால் அவள் துயரத்தை வெளியிடும் பொழுது அது பிறருடைய வாழ்க்கையைப் பாதிக்கக் கூடாது என்பதை நன்கு அறிந்திருந்தனர். இவர்கள். தலைவன் மாட்டு அன்புகொண்ட தலைவியின் துயரம் பெரிதாய் இருக்குமென்பதிலும், அது கண்ணிராகப் பெருகும் என்பதிலும் எவ்வித ஐயுறவும் இல்லை. என்றா லும் அத் துயரத்தையும் கண்ணிரையும் பிறர் பார்க்கும் அளவுக்குக் காட்டுதல் முறையா என்ற வினாத் தோன்றிற்றுப் போலும்! தன் துயரத்தைப் பிறர் அறியு மாறு காட்டுவதில் தவறில்லை எனினும் அடுத்த வீட்டில் உள்ளவர்கள் அந்த நேரத்தில் மகிழ்ச்சியான ஒரு செயலில் ஈடுபட்டிருப்பின் இவர்கள் துயரமும் கண்ணிரும் அவர் களுடைய மங்கலமான விழாவிற்கு இடையூறு போல் காணப்படும் அன்றோ?எனவே இத் தமிழன் என்ன முடிவு செய்தான்? தன் துயரம் எத்துணை ஆழமானதாக இருப் பினும் அதனைப் பிறர் அறியுமாறு காட்டுதல் முறையன்று என்று கருதினான். ஆதலால் கண்ணில் நிறைந்த கண்ணிர் கீழே விழக்கூடாது என்று கூறினான். கண்ணிறை நீர் மல்க' என்பது சங்கப் பாடல். கண்ணின் இறைப்பை 8---- بg.L